நயன்தாரா மண்டையை மத்தளம் ஆக்கிய இரண்டு பேர்.. வைரலாகும் வீடியோ..!

நயன்தாரா மண்டையை மத்தளம் ஆக்கிய இரண்டு பேர்.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக இருப்பவர் நடிகை நயன்தாரா. திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தாயான நிலையிலும், நயன்தாராவுக்கு தமிழ் சினிமாவில் இன்னும் இமேஜ் சிறிதும் குறையவில்லை. அதனால் அவர் தங்களது படங்களில்நடிக்க வேண்டும் என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவர் வீட்டு வாசலில் தவம் இருக்கின்றனர்.

நயன்தாரா

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி மாஸ் நடிகையாக இருந்து வருகிறார்.

கடந்தாண்டில் ஜவான் என்ற ஹிந்தி படத்திலும் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துவிட்டார். பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து சிறப்பான வரவேற்பை ஜவான் படத்தில் பெற்றுவிட்டார். அட்லி இயக்கிய இந்த படம் 1150 கோடி ரூபாய் வசூலில் சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா மண்டையை மத்தளம் ஆக்கிய இரண்டு பேர்.. வைரலாகும் வீடியோ..!

இரட்டை பிள்ளைகள்

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் திருமணம் செய்து கொண்ட நயன்தாரா, இரட்டை பிள்ளைகளை வாடகைத் தாய் மூலம் பெற்று, அம்மாவாகி யுள்ளார். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என பெயர் வைத்துள்ளார்.

தன்னுடைய குழந்தைகள் வளர்ப்பில் மிகப்பெரிய அக்கறையும், அன்பும் காட்டிவரும் நயன்தாரா, வெளியிடங்களுக்கு செல்லும் போதெல்லாம் தனது குழந்தைகளையும், தன்னுடனே அழைத்துச் செல்கிறார். படப்பிடிப்பு தளங்களில் கூட குழந்தைகளுடன் அவர் வருகிறார்.

குழந்தைகளுடன்…

இதனால் சென்னையிலேயே சூட்டிங்கை வைத்துக் கொள்ளுமாறு இயக்குனர்களிடம் அவர் வலியுறுத்துவதாக நயன்தாரா மீது விமர்சனங்கள் எழுகின்றன. இருந்த போதிலும் தன்னுடைய குழந்தைகள் தான் தன்னுடைய உலகம் என்பதில் நயன்தாரா உறுதியாக இருப்பதால், இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் அவரது கோரிக்கையை ஏற்று சென்னையில் படப்பிடிப்பை வைத்துக் கொள்கின்றனர்.

படப்பிடிப்பு தளங்களுக்கு அவர் குழந்தைகளுடன் வருவதையும் அனுமதிக்கின்றனர்

அதேபோல் நயன்தாரா செல்லும் போது, குழந்தைகளுடன் டைரக்டர் விக்னேஷ் சிவனும் உடன் செல்கிறார். ஆக நான்கு பேரும் மொத்தமாக தான் எந்த இடங்களுக்கும் செல்வது வழக்கமாக உள்ளது.

நயன்தாரா மண்டையை மத்தளம் ஆக்கிய இரண்டு பேர்.. வைரலாகும் வீடியோ..!

அன்னையர் தினம்

இந்நிலையில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை, வீடியோக்களை நயன்தாரா அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறார்.

அன்னையர் தினத்தை பற்றி நயன்தாரா வெளியிட்ட வீடியோவில், தன்னுடைய உயிர், உலக் குழந்தைகள் இருவரும்தான் என் வாழ்க்கை. என்னுடைய உயிர், உலகம் தன்னுடைய மகன்கள் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

நயன்தாரா மண்டையை மத்தளம் ஆக்கிய இரண்டு பேர்.. வைரலாகும் வீடியோ..!

தோள் மீது அமர்ந்து கொண்டு…

இந்த வீடியோவில் அவர் மகன் நயன்தாராவின் தோள் மீது அமர்ந்து கொண்டு அவர் தலையை மத்தளம் ஆக்கி தாளம் போட்டதை பார்க்க முடிந்தது. இந்த வீடியோவில் அந்த செயலைக் கண்டு மிகவும் என்ஜாய் செய்ததாக நயன்தாரா காணப்பட்டார். இந்த வீடியோவை விக்னேஷ் சிவனும் ஷேர் செய்துள்ளார்.

நயன்தாரா மண்டையை மத்தளம் ஆக்கிய அவரது இரண்டு குழந்தைகளின் செயலை நயன்தாரா ரசிக்கும் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

நயன்தாரா மண்டையை மத்தளம் ஆக்கிய இரண்டு பேர்.. வைரலாகும் வீடியோ..!