“பாறை இடுக்கில்.. பஞ்சு மெத்தை விரித்து..” – அப்படி போஸ் கொடுத்துள்ள நயன்தாரா..! – வைரல் ஹனிமூன் போட்டோஸ்..!

கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக காதலில் இருந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்கள்.

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு தேனிலவு கொண்டாட சென்றிருந்த இருவரும் தற்பொழுது ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு இரண்டாவது தேனிலவை கொண்டாட சென்றிருக்கின்றனர்.

அங்கே தங்களுடைய ரொமான்ஸ் புகைப்படங்களை கேமராவின் கண்கள் வழியே ரசிகர்களின் கண்களுக்கு கடத்தி வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்தபோது அந்த படத்தின் இயக்குனர் விக்னேஷ் அவருடன் காதல் வயப்பட்ட நடிகை நயன்தாரா கடந்த 6 ஆண்டுகளாக அவரை காதலித்து வந்தார்.

தற்போது அவரையே திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி அஜித்-ஷாலினி, சூர்யா-ஜோதிகா-விற்கு அடுத்தபடியாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் பெயர்தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றது.

ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் அப்படியே நடிகர் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான லொகேஷன்களை தேர்வு செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

ஒரு பக்கம் ஹனிமூன் மறுபக்கம் லொகேஷன் தேர்வு என பிஸியாக வேலை செய்து வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்நிலையில், பாறைக்கு நடுவே படுக்கை விரித்து தங்களுடைய காதலை கொண்டாட ஏற்பாடு செய்துள்ள புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், மனுஷன் வாழ்றான்யா… என்று விக்கி-நயன் ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …