“ம்.. ஹ்ம்.. இதெல்லாம் கனவுல கூட நினைத்து பார்க்க முடியாது..!..” – நயன்தாரா-வை பார்த்து கண்ணீர் விடும் ரசிகர்கள்..!

நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 2022 நிலவரப்படி நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு 165 கோடி ரூபாய் என்று கணக்கிடப்படுகிறது.

இவை அனைத்தும் நடிகை நயன்தாரா தாக்கல் செய்த வருமானத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்குகள் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் பிரபல இயக்குனரும் தன்னுடைய நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் நடிகை நயன்தாரா.

மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்ற இவர்களது திருமண விழாவில் நடிகர்கள் ஷாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், விஜய்சேதுபதி, சூர்யா, என முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்து கொடுக்க விக்னேஷ் சிவன் நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 2003ஆம் ஆண்டு மலையாள திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான நடிகை நயன்தாரா தற்போது தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் டாப் நடிகையாக இருக்கிறார்.

இந்நிலையில் இவருடைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் 165 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. சமீபகாலமாக வெறும் 20 நாள் கால்ஷீட் கொடுப்பதற்காக 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் நடிகை நயன்தாரா என்ற தகவல் வெளியாகி இருக்கின்றது.

மட்டுமில்லாமல் பிராண்ட் அம்பாசிடராக பணியாற்ற நடிகை நயன்தாரா அதற்கு ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறாராம். மட்டுமில்லாமல் ஹைதராபாத்தில் இரண்டு ஆடம்பர பங்களாக்கள் சென்னையில் நான்கு வீடுகள் கேரளாவில் உள்ள அவரது பெற்றோர் வீடு உட்பட இந்தியா முழுதும் பல குடியிருப்புகளில் சொந்தமாக வைத்திருக்கும் நடிகை நயன்தாரா ஹைதராபாத் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 15 கோடி ரூபாயாம்.

தெலுங்கு திரை உலகில் வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் இந்த வீடுகள் அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, இவருடைய சென்னையில் இருக்கும் வீடுகள் மற்றும் ஒவ்வொன்றும் நூறு கோடி ரூபாய் மதிப்பு வரும் என கூறப்படுகிறது.

சமீபத்தில் தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வாங்கி இருந்தார் நடிகை நயன்தாரா அது அவருடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்காக சென்னை மற்றும் ஐதராபாத் பயணங்களை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்ள இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சொந்தமாக தோல் பராமரிப்பு நிறுவனத்தை மருத்துவர் வனிதா ராஜன் என்பவருடன் சேர்ந்து தொடங்கியிருக்கிறார் நூற்றுக்கு மேற்பட்ட வகைகளுடன் இது உலகின் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்து வருகின்றது.

79 லட்சம் மதிப்பில் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் மற்றும் 88 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் ஜிஎஸ்எல், இன்னோவா கிரிஸ்டா உள்ளிட்ட கார்களை தனதாக்கிய வைத்திருக்கிறார் நடிகை நயன்தாரா.

விரைவில் ரோல்ஸ்ராய்ஸ் கார் வாங்கும் திட்டமும் நடிகை நயன்தாராவிடம் இருக்கிறதாம். இந்த விபரங்களை அறிந்த ரசிகர்கள் இதெல்லாம் கனவுல கூட எங்களால் நினைத்துப் பார்க்க முடியாது என்று கண்ணீர் விட்டு வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

என் புருஷன் பாடாய் படுத்துறாரு.. புலம்பி தவிக்கும் வரலட்சுமி சரத்குமார்..!

வாரிசு நடிகையான வரலட்சுமி சரத்குமார் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளாவார். இவர் தமிழ் சினிமாவில் போடா போடி …