நீச்சல் குளத்தில் நயன்தாரா.. செல்போனில் படம் பிடித்த சிறுவனுக்கு நேர்ந்த கொடுமையை பாருங்க..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்ததோடு இல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் அண்மையில் அட்லி இயக்கத்தில் வெளி வந்த பாலிவுட் திரைப்படமான ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானோடு இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி பாலிவுட்டில் தடம் பதித்தார்.

நீச்சல் குளத்தில் நயந்தாரா..

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் பலரோடும் இணைந்து நடித்து இருக்கின்ற இவர் ஆரம்ப நாட்களில் திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருந்தாலும் நாள் செல்ல செல்ல பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

மேலும் படங்களில் நடிக்கும் போது பல்வேறு கிசுகிசுகளுக்கு ஆளாகியிருந்த நடிகை நயன்தாரா தமிழ் திரைப்பட இயக்குனரான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டதை அடுத்து அந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனை அடுத்து அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் வெற்றியை தராததை அடுத்து கட்டாயம் ஒரு வெற்றியை தந்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

செல்போனில் படம் பிடித்து சிறுவன்..

இந்நிலையில் நீச்சல் குளத்தில் தன் மகன்களோடு நின்றிருந்த நயன்தாராவை செல்போனில் படம் பிடித்த சிறுவனுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய விரிவான விஷயத்தை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் நடிகை நயன்தாரா சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி இருக்கிறார். இந்த அப்பார்ட்மெண்ட் வாசிகள் பலரும் நயன்தாராவே எங்களுடைய அப்பார்ட்மெண்டில் தான் தங்கி இருக்கிறார் என்று பெருமைப்பட்டுக் கொண்டனர். ஆனால் தற்போது இதுவே மிகப்பெரிய வில்லங்கமாக மாறி இருக்கிறது.

இது வரை நயன்தாரா மீது ஐம்பதுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக பிரபல யூட்யூபர் வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிடும்படியாக நடிகை நயன்தாரா நீச்சல் குளத்தில் தன்னுடைய குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கக்கூடிய ஒரு சிறுவன் தன்னுடைய நண்பர்களை தொலைபேசியில் கைபேசியில் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.

என்ன கொடுமை நடந்தது தெரியுமா?

அப்போது அதனை கவனித்த நடிகை நயன்தாரா அவனுடைய செல்போனை புடுங்கி எந்தெந்த போட்டோ மற்றும் வீடியோவில் நயன்தாரா பதிவாகியுள்ளாரோ அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை டெலிட் செய்து அந்த சிறுவனை அதட்டி அனுப்பி இருக்கிறார்.

இதனால் மிரண்டு போன அந்த சிறுவன் அவருடைய பெற்றோரிடம் தகவலை தெரிவிக்க இந்த பெற்றோர்கள் தங்களுடைய அப்பார்ட்மெண்ட் யூனியனிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஒரு சிறுவன் தன்னை செல்போனில் படம் பிடித்துவிட்டான் என்பதற்காக நடிகை நயன்தாரா செய்த இந்த செயல் குறித்த இணைய பக்கங்களில் பரவலாக பேசப்பட்டு இருக்கிறது.

இது குறித்து உங்களுடைய கருத்து என்ன..? என்பதை கமெண்ட் செக்சன்னில் பதிவு செய்யலாம். மேடம் என்ற விஷயம் குறித்து உங்கள் நண்பர்களோடு ஷேர் செய்து உங்கள் அபிப்ராயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

---- Advertisement ----

Check Also

நயன்தாரா கையை உதறி சென்ற விக்னேஷ் சிவன்..! முகம் வாடிய நயன்தாரா..! வைரல் வீடியோ..!

மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை நயன்தாரா தமிழ் திரைப்படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களிலும் தனது அபார …