“விடிய விடிய பாத்துகிட்டே இருக்கலாம்..” – இரவு நேரத்தில்.. மிதக்கும் படகில்.. கணவருடன் நயன்தாரா ரொமான்ஸ்..!

சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை துபாயில் கொண்டாடிய இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட சில ரொமான்டிக் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நடித்த போது நடிகை நயன்தாராவுக்கும் அந்த படத்தின் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் காதல் பற்றிக்கொண்டது.

கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இருக்கிறார்கள். காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தில் கடைசியாக நடிகை நயன்தாரா நடித்து இருந்தார்.

கடந்த ஜூன் மாதம் இருவருக்கும் மகாபலிபுரத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் புடைசூழ இந்த திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்துக்கு ஹனிமூன் கொண்டாட சென்றிருந்த நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது துபாயில் டேரா போட்டு இருக்கிறார்கள்.

அங்கே விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடிய நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் குடும்பத்தினர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்நிலையில் மிதக்கும் கப்பலில் கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் நடிகை நயன்தாரா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் இந்த அழகை விடிய விடிய பாத்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு.. என்று தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் விஜய்யின் மனைவி சங்கீதா..! எப்படி மாறிட்டாரு பாருங்க..!

தமிழ் திரை உலகில் இன்று அசைக்க முடியாத ஒரு இடத்தை பிடித்திருக்கும் தளபதி விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டும் …