திருமணதிற்கு பிறகு கடுமையான மன உழைச்சலில் நடிகை நயன்தாரா..! – என்ன காரணம்..?

தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் தங்களது சினிமா வாழ்க்கையில் இரண்டாவது ரவுண்டில் வெற்றி பெற்று ஜெயித்தவர்கள் வெகு சிலர் தான். அதில் நடிகை நயன்தாராவும் ஒருவர்.

தற்போது 37 வயதானாலும் கூட இன்னும் இளமை தோற்றத்துடன் ரசிகர்களை வசீகரிக்கும் நடிகை நயன்தாரா தனது நீண்டநாள் காதலரை விக்னேஷ் சிவனை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

மறக்கமுடியாத கதாபாத்திரங்களை ஏற்று பல படங்களில் நடித்திருக்கும் நடிகை நயன்தாரா சமீபகாலமாக படங்களில் நடிக்கும்போது பெரிய பிரச்சனையை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

அதாவது திருமணத்திற்கு முன்பே சில படங்களில் கமிட்டாகி இருந்த நடிகை நயன்தாரா தற்போது அந்த படங்களில் நடிக்க கடுமையான சிக்கலை எதிர்கொண்டு இருக்கிறாராம்.

அதாவது படத்தின் காட்சிக்கு ஏற்ப உடை அணிய வேண்டும் அந்த உடை அணியும் பொழுது தன்னுடைய தாலியை கழட்ட கூடாது. அந்த உடைக்கு உள்ளேயே மறைக்க வேண்டும். எனவே தன்னுடைய உடைகளை மாற்றி கொடுக்கும்படியும் சற்று என்னுடைய தாலியை மறைக்கும் படியான அமைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் படியும் தன்னுடைய ஆடை வடிவமைப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஆனால் இயக்குனர்கள் இந்த காட்சிக்கு இந்த உடை பொருத்தமாக இருக்காது தயவு செய்து மாற்றிக் கொண்டு வாருங்கள் என்று நயன்தாராவிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும்… ஆனால் நடிகை நயன்தாரா இந்த விஷயத்தை அவர்களிடம் எடுத்துக் கூறி புரிய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது எனவும், தன்னுடைய தாலி விஷயத்தில் நடிகை நயன்தாரா மிகவும் சென்சிட்டிவான மனநிலையில் இருப்பதாக தெரிகிறது.

கிறிஸ்தவராக பிறந்திருந்தாலும் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட நடிகை நயன்தாரா இந்து முறைப்படி கோயில்களுக்குச் செல்வது மற்றும் பரிகாரங்கள் செய்வது என தொடர்ந்து தன்னை ஹிந்து வழக்கப்படி மாற்றிக் கொண்டிருக்கிறார். இதனாலோ என்னவோ நடிகை நயன்தாராவுக்கு தன்னுடைய தாலியின் மீது மிகவும் சென்சிட்டிவான மனப்பாங்கு இருக்கிறது எனக் கூறுகிறார்கள்

இதனை புரிந்து கொண்ட இயக்குனர்கள் நடிகை நயன்தாராவின் உடையை அவர் விருப்பப்படி அணிந்து கொள்ளட்டும் என்று விட்டு விடுகிறார்களாம். ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பது கண்டிப்பாக பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனவே படங்களில் நடிப்பதில் இருந்து விலகி படம் தயாரிப்பில் ஈடுபட நடிகை நயன்தாரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், நடிகை நயன்தாரா இப்படி தன்னுடைய தாலி விஷயத்தில் சென்சிட்டிவான இருக்கும் விஷயத்தை அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறிவருகிறார்கள்.

செய்தி வாசிப்பாளராக பணியாற்றும் பெண்கள் கூட தன்னுடைய தாலியை கழற்றி வைத்து விட்டு போகும் நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் சம்பளம் கொடுக்கும் ஒரு சினிமா துறையை தன்னுடைய தாலியை அகற்ற முடியாது என்ற ஒரு காரணத்திற்காக படங்களிலேயே நடிக்கவில்லை என்று நயன்தாரா ஒதுக்குவது வியப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

நிஜமாகவே திருமண வாழ்க்கை நன்றாக செழிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …