என்ன நடக்கிறது? விட்ட இடத்தை மீண்டும் பிடிக்கும் திரிஷா … அப்செட் ஆகி… அனலாய் வயிறு எரிந்து இருக்கும் நயன்தாரா !

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரை தமிழ் திரையுலகில் வலம் வருவதற்கு முன்னால் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்து சக்கை போடு போட்டு இருந்தவர் தான் திரிஷா இவரின் வரவுக்குப் பின்னர் திரிஷாவின் இடம் கொஞ்சம் கொஞ்சமாக காலியாகிவிட்டது.

 இதையடுத்து நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு பாலிவுட்டிலும்  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு தமிழ் உலகில் நம்பர் ஒன்றாக கொடிகட்டி பறக்கிறார்.

 இந்த நிரந்தர வெற்றிக்கு ஆப்பு வைக்கும் விதமாக தற்போது திரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் ரசிகர்கள் பெருமளவு பேசப்படுகிறது. பொன்னியின் செல்வனில் குந்தவை வேடத்தை ஏற்று நடித்திருக்கும்  நடிகை திரிஷா அதில் மிகவும் பக்குவமாகவும், எதார்த்தமாகவும் நடித்து இருக்கின்ற விதம் அவருடைய  ஸ்டைலை பார்த்து ரசிகர்கள் அனைவரும் திரிஷா அன்று பார்த்தது போல் இன்று அப்படியே இருக்கிறார் என்று பேசுவதாக செய்தி.

 இதனைத்தொடர்ந்து நயன்தாரா மிகவும் அப்செட் ஆக இருக்கிறார். தனது கணவனின் பிறந்தநாளுக்காக துபாய் சென்று இருக்கும் அவர் மீண்டும் திரிஷா தனக்கு போட்டியாக வந்து விட்டாரோ என்று எண்ணி தனக்குள் பயம் கொண்டிருக்கிறார்.

 அதற்கு ஏற்றது போலவே திரிஷாவிற்கு பல பட வாய்ப்புகள் வந்து குவிகின்ற வேளையில் அவர் தரமான கதையம்சம் நிறைந்த கேரக்டர் உள்ள கதையை தேர்வு செய்து வருவதாக தெரிகிறது.

 இதை அடுத்து நயன்தாரா மீண்டும் நடிப்பில் கவனம் முழுமையாக செலுத்த வேண்டும் என்பதில் திட்டவட்டமாக இருப்பதாக  நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்தி கூறுகிறது.

மேலும் இதனைத் தொடர்ந்து விஜய்யின் அடுத்த திரைப்படத்திற்கு திரிஷாவிற்கு ஒரு கனமான முக்கிய அம்சம் நிறைந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை கேள்விப்பட்ட நயன்தாரா மேலும் டென்ஷன் ஆகியுள்ளார். எந்த ஆட்டத்தை எப்படி தான் ஆடினால் முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற சிந்தனையில்  இருப்பதாக கூறுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் பட ரிலீசுக்குப் பிறகு திரிஷாவிற்கு ஏறுமுகமாக, இறங்குமுகமாக என்பது  விரைவில் தெரிந்து விடும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …