தொளதொள டீசர்ட்.. காதலனுடன் நெருக்கமாக நயன்தாரா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இருவரும் வரும் ஜூன் 9-ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான காத்துவாக்கில் ரெண்டு காதல் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை நயன்தாரா தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவனுக்கு பல கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களை வழங்கி உள்ளார்.

அந்த பரிசு பொருட்களுடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

வல்லவன் படப்பிடிப்பின் போது நடிகர் சிம்புவை காதலித்த நயன்தாரா அந்த காதல் செட் ஆகாமல் போனதால் அவரை பிரிந்தார். தொடர்ந்து, வில்லு படத்தின் ஷூட்டிங்கின்போது நடிகர் இயக்குனர் பிரபுதேவாவுடன் காதலில் விழுந்தார்.

இதனை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா அவருடைய மனைவியை விவகாரத்து செய்து விட்டு நயன்தாராவை உடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர் இதனை தொடர்ந்து நடிகர் பிரபுதேவா தற்போது சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

ஆனால், நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் படப்பிடிப்பின்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார். இந்த காதல் திருமணம் வரை சென்றுள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் அவருடைய குடும்ப ஜோதிடர் கூறியதன் பேரில் வருகின்ற ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் படப்பிடிப்பின் செட்டில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …