என் வாழ்க்கையில் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன்..! – கதறும் நஸ்ரியா..! – என்ன ஆச்சு..?

என்னுடைய வாழ்க்கையில் இனி இந்த தவறை செய்யவே மாட்டேன் என்று நடிகை நஸ்ரியா சபதம் எடுத்திருக்கிறார். அப்படி என்ன சபதம் எதற்காக இந்த சபதத்தை எடுத்தார் வாருங்கள் பார்க்கலாம்.

தமிழில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. இந்த திரைப்படத்தின் மலையாள நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தார் அம்மணி.

அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ், ஆர்யா, ஜெய் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த நஸ்ரியா திடீரென பிரபல மலையாள பட தயாரிப்பாளரும் நடிகருமான பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் செட்டிலானார்.

இவர் கடைசியாக நடித்த தமிழ் திரைப்படம் நய்யாண்டி ஆகும். இந்த படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் டூப் நடிகையை போட்டு என்னுடைய தொப்புள் என அந்த நடிகையின் தொப்புளை காட்டி விட்டார்கள் இது மிகவும் மன உளைச்சலாக உள்ளது என்று நாலாபக்கமும் புகார் கொடுத்து பெரிய பரபரப்பை கிளப்பினார் நடிகை நஸ்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் நேரம், ராஜா ராணி, திருமணம் எனும் நிக்காஹ், நையாண்டி உள்ளிட்ட நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கும் நடிகை நஸ்ரியாவுக்கு தமிழகம் முழுதும் ரசிகர் பட்டாளம் இருக்கின்றது.

திருமணத்திற்கு பிறகும் இவர் படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் டாப் நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திருமணத்திற்கு பிறகு இவருடைய வேகம் குறைந்து விட்டது என்று தான் கூற வேண்டும். சமீபத்தில் நடிகர் நானி நடிப்பில் வெளியான அடடேசுந்தரா என்ற படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற தவறிவிட்டது.

இந்நிலையில் தாய்லாந்து சுற்றுலா சென்றிருந்த நடிகை நஸ்ரியா தாய் ஏர்வேய்சில் பயணித்துள்ளார். அப்பொழுது, நடிகை நஸ்ரியாவின் பைகள் காணாமல் போய் உள்ளன. இது குறித்து விமானத்தின் பணியாற்றிய ஊழியர்களிடம் கேள்வி எழுப்பிய போது அவர்கள் முறையான பதில் கொடுக்காமல் நடிகை நஸ்ரியாவை அங்கிருந்து அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பலமுறை முயற்சித்தும் நஸ்ரியாவிற்கு அவருடைய பைகள் கிடைக்கவில்லை. இது இதுகுறித்து பதிவை வெளியிட்டுள்ள நடிகை நஸ்ரியா நான் மிகவும் மோசமான அனுபவத்தை தாய் ஏர்வேய்ஸில் சந்தித்துள்ளேன். இனிமேல் தாய் ஏர்வேய்ஸில் வாழ்க்கை முழுக்க பயணம் செய்ய மாட்டேன் என்று கூறி ஒரு பதிவை பதிவு செய்திருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …