பட வாய்ப்புக்காக இப்படியுமா..? – கிளாமர் ரூட்டிற்கு மாறிய நீலிமா ராணி..! – வைரல் போட்டோஸ்..!

நீலிமா ராணி,(Neelima Rani) டிவி சீரியல்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். சினிமாவிலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். கடந்த1983ம் ஆண்டில் பிறந்த நீலிமா ராணி, சினிமா மற்றும் சீரியல் இரண்டிலும் பெயர் சொல்லும்படியான ஒரு நல்ல நடிகையாக கலைத்துறையில் வலம் வருகிறார்.

கடந்த 1992ம் ஆண்டில் வெளிவந்த தேவர் மகன் படத்தில், சிவாஜியுடன் விளையாடும், பாடும் குழந்தைகளில் நீலிமா ராணியும் ஒருவர். 30 வயதுகளை கடந்த நீலிமா, சென்னையை சேர்ந்தவர். இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நீலிமா நடித்திருக்கிறார். அதே போல், இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

கார்த்தி – காஜல் அகர்வால் நடித்த நான் மகான் அல்ல படத்தில் நடித்ததற்காக, சிறந்த துணை நடிகை விருது பெற்றவர் நீலிமா. அமளி துமளி, இருவர் உள்ளம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில், இவரது நடிப்பு கவனிக்கும் விதமாக இருந்தது.டிவி சீரியல்களில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடித்து, மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தவர் நீலிமா ராணி.

கடந்த 2002– 2005ம் ஆண்டுகளில், மெட்டி ஒலி சீரியலிலும், 2003– 2007ம் ஆண்டுகளில், தற்காப்பு கலை தீராதா சீரியலிலும், 2003–2009ம் ஆண்டுகளில், கோலங்கள் சீரியலிலும், 2005– 2007 ம் ஆண்டுகளில், என் தோழி என் காதலி என் மனைவி என்ற சீரியலிலும்,கடந்த 2008ம் ஆண்டில், புதுமை பெண்கள், 2009–2012 ம் ஆண்டுகளில் தென்றல் சீரியல்களிலும், 2010 –2012ம் ஆண்டுகளில் இதயம் சீரியலிலும், 2009–2013 ம் ஆண்டுகளில், செல்லமே, 2013 ம் ஆண்டில் மகாபாரதம் சீரியல்களிலும் நீலிமா நடித்திருக்கிறார்.

இதில் சில நாடகங்களில் மகளாக, சகோதரியாக, மனைவியாக, காதலியாக என பல கதாபாத்திரங்களில் நடித்து, பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். சில சீரியல்களில் வில்லி கேரக்டரிலும் நீலிமா நடித்து அசத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சினிமாவில் பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம், பிரியசகி,இதயத்திருடன், திமிரு, ஆணிவேர், மொழி, சந்தோஷ் சுப்ரமணியம், ராஜாதி ராஜா, சிலந்தி, புகைப்படம், ரசிக்கும் சீமானே, நான் மகான் அல்ல, முரண், மிதிவெடி, காதல் பாதை, மதில் மேல் பூனை, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், அமளி துமளி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

சிறுமியாக தேவர் மகன் படத்தில் அறிமுகமாகி, சீரியல்களில் பிரபலமாகி, சினிமாவிலும் இடையிடையே நடித்து, நல்ல நடிகையாக பெயர் பெற்றவர் நீலிமா. பாண்டவர் பூமி, விரும்புகிறேன் படங்களில் சிறுமியாகவும் அடுத்தடுத்த படங்களில் வளர்ந்த பெண்ணாக கல்லூரி மாணவியாக, கதாநாயகியின் தோழியாக, கதாநாயகனின் தங்கையாக, மகளாக, மனைவியாக பல கேரக்டர்களில் நீலிமா நடித்திருக்கிறார்.

சின்ன சின்ன கேரக்டர்களில் நீலிமா நடித்தாலும், குறுகிய நேரமே படத்தில் வந்து சென்றாலும் அவருக்கு தரப்பட்ட அந்த நடிப்பு, முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தது.

டிவி சீரியல், சினிமா என பிஸியாக நடித்துவரும் நீலிமா, சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கிறார். அடிக்கடி தனது கவர்ச்சி படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். லைக்குகள், கமெண்டுகள் குவிந்து வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

முத்தம் கொடுத்ததும் மூடான ஜில் நடிகை..! – படப்பிடிப்பு தளத்திலேயே குலுங்கிய கேரவேன்..!

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஜில் நடிகை தன்னுடைய பட வாய்ப்புக்காக படாத பாடுபட்டு வந்தார். ஆரம்பத்தில் …