Actress | நடிகைகள்
குழந்தைக்கு பால் கொடுக்குறேன்.. ஆனா, என்னோட மார்பகம் பற்றி அப்படி பேசுறாங்க..! நீலிமா ராணி அதிரடி..!
நீலிமா ராணி(Neelima Rani)தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான ஒரு நடிகையாக இருக்கிறார். தமிழ் சினிமாவிலும் நடித்திருக்கிறார். முன்னணியில் உள்ள பிரபல டிவிகளில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களிலும், நீலிமா நடித்து வருகிறார்.கமல்ஹாசன், சிவாஜி கணேசன் நடிப்பில் உருவான, தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படம் தேவர்மகன்.
இந்த படத்தில், கமல் அண்ணன் தலைவாசல் விஜய்யின் குழந்தைகளில் ஒருவராக நீலிமா ராணி, குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.இதுவரை 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் பலவிதமான கேரக்டர்களில் நீலிமா நடித்து, ரசிகர்கள் மத்தியில் தன்னை நல்ல நடிகையாக நிரூபித்து இருக்கிறார்.

Neelima Rani
மெட்டி ஒலி, கோலங்கள், புதுமைப்பெண்கள், தென்றல், பவானி, செல்லமே போன்ற சீரியல்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர் நீலிமா.தேவர்மகன் படத்தை அடுத்து பாண்டவர் பூமி, விரும்புகிறேன், தம்பி, பிரியசகி, மொழி, சந்தோஷ் சுப்ரமணியம், ராஜாதி ராஜா உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார்.
கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தில், நடித்த, நீலிமா ராணிக்கு, சிறந்த துணை நடிகை விருதும் கிடைத்தது.சமீபத்தில், தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஐபிஎல் கிரிக்கெட் மேட்சை கண்டுகளித்த நீலிமா ராணி, ஸ்டேடியத்தில் இருந்தபடி தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

Neelima Rani
இப்போது, வருத்தப்பட்டு அவர் சொன்ன விஷயங்களும் சோஷியல் மீடியாவில் மிக வேகமாக பரவி வருகின்றன.எனக்கு கடந்த 2008ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு கடந்த 15 ஆண்டுகளாக சினிமாவில், சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். ஒரு நடிகையாக என்னை பொது இடங்களில் பார்ப்பவர்கள், என்னை நடிகையாக மதித்து மரியாதையாக தள்ளி நின்று பேசுவார்கள்.
இன்னும் சிலர், நடிகைதானே? என்ற அலட்சியத்தில் கண்டும் காணாமல் அலட்சியப்படுத்தி விட்டு செல்வார்கள். இன்னும் சிலர் என்னை திட்டவும் செய்வார்கள். அது சீரியல்களில் நான் நடித்த கேரக்டர் தந்த தாக்கமாக இருக்கலாம் என,. நினைத்துக்கொள்வேன்.

Neelima Rani
ஒருமுறை விமான நிலையத்தில், எனக்கு ஒரு மோசமான அனுபவம் நடந்தது. அங்கு வயதான பாட்டி ஒருவர் என்னை கண்டபடி திட்டினார். என் மார்பகத்தை பற்றி கூட தவறாக விமர்சனம் செய்து பேசினா்.
அதெல்லாம் எனக்கு மிகுந்த வேதனையை தந்தது. எனக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. குழந்தைகளுக்கு பால் தருவதால், என் மார்புகள் அப்படி இருக்கின்றன. தவிர, குழந்தை பெற்ற பிறகு நான், சற்று வெயிட் போட்டிருக்கிறேன்.

Neelima Rani
இதுவெல்லாம் என்னை சார்ந்த தனிப்பட்ட விஷயம். ஆனால், நடிகர்களாக இருந்தாலும், அவர்களுக்கும் பர்சனல் லைப் உண்டு என்பதை புரிந்துகொள்ளாமல் பேசுபவர்களுக்கு பதில் சொல்லி புரிய வைப்பதில் எந்த பயனும் இல்லை என்று, அதை அப்படியே விட்டு விடுகிறேன், என்று வருத்தமாக கூறியுள்ளார்.
சினிமா நடிகை என்றாலே, இளக்காரமாக நினைக்கும் மனிதர்கள் இப்போதும் இருக்கவே செய்கின்றனர். அதற்காக வருந்தாதீர்கள் என, நீலிமா ரசிகர்கள், அவருக்கு கமெண்ட் பாக்சில் ஆறுதல் கூறி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.
You must be logged in to post a comment.