6 புதிய எலெக்ட்ரிக் கார்களா? எங்கே எப்போ…

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை அதிக அளவு உயர்ந்து வரும் நிலையில்  அதற்கு மாறாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்துவதில் பல்வேறு வகையான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. 

காற்று மாசினை குறைத்து சுற்றுப்புற சூழலை மேம்படுத்த  2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இயங்கும் பெரும்பாலான வாகனங்கள் இ.பைக்கு வாகனங்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் electric Vechile revolution-ஐ இந்திய அரசு முன்னெடுத்து செல்கிறது. இதனை பயன்படுத்த மக்களும் மிக ஆர்வமாக இருக்கிறார்கள். 

இதனால் இந்தியாவில் பல கார் கம்பெனிகள் போட்டி போட்டுக் கொண்டு இ.கார்களை உற்பத்தி செய்வது மற்றும் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் அசத்திவருகிறது.

அந்த வரிசையில் ஹூண்டாய் நிறுவனம் வரும் 2028ம் ஆண்டுக்குள்  6 புதிய எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு, இதற்காக ரூ.4,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.

மக்களின் தேவைகளையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் எலெக்டிரிக் கார்களை வடிவமைக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

E-GMP எனப்படும் மின்சார கார்களுக்கான   கட்டமைப்புக் கொள்கையின் அடிப்படையில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார்கள் உருவாக்கப்படும் என ஹூண்டாய் அறிவித்துள்ளது.

மேலும் எலக்ட்ரிக் கார்களை மலிவு விலையில் விற்பனை செய்வதோடு அந்த காருக்குள் தேவையான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யவும், சார்ஜ் பயிண்டுகளை அதிகளவு அமைக்கவும் ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

எப்போது இ.பைக்குகள் பெருக்கி உள்ள சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கான மவுசு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். 6 கார்களை இந்நிறுவனம் இந்தியாவில் தான் அறிமுகப்படுத்த போகிறது.அது வரை காத்திருப்போம்.