சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டிய பனிமலர்..! -ஊட்டி ரிசார்ட்டில் குளுகுளு போஸ்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

பனிமலர் பன்னீர்செல்வம் ( Panimalar Panneerselvam ) தமிழ்நாட்டின் தொலைக்காட்சி பத்திரிகையாளர், திராவிட கருத்தியல்வாதி மற்றும் சமூக பெண் ஆர்வலர் ஆவார்.இவர் பெரும்பாலும் பெண்ணியம், திராவிடம், பெரியாரியம் போன்றவற்றை ஆதரித்தும், ஆளும் அரசின் இந்துத்துவ சித்தாந்தத்தை விமர்சித்தும் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை அடிக்கடி வெளிப்படத்துவதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

செய்தி நிர்வாகம், நிகழ்ச்சித் தயாரிப்பு, விளம்பர மாடல், ஆன்லைன் அழகுக்கலைப் பயிற்சி, ப்ரைடல் ஸ்டூடியோ நிறுவனர் என பல துறைகளில் கலக்கும் பனிமலர் பன்னீர்செல்வம். சமூக வலைதளங்களில் பெண்கள் வழக்கமாக சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் இவரும் சந்தித்து வருகிறார்.

ஆனால், அந்த விஷயங்களை அசால்டாக ஹேண்டில் செய்து விட்டு முன்னேறிக்கொண்டே இருப்பது இவரது தனிச்சிறப்பு மட்டுமின்றி மற்ற பெண்களுக்கு முன்னுதாரணம் என்றும் சொல்லலாம்.

அவ்வப்போது சமூக வலைதளங்களில் சாதி மறுப்பு மற்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இவர் பதிவிடும் கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சாராரையே விமர்சனம் செய்து வருவதால் அந்த தரப்பினர் இவருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்து பதிவிடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.

இதே வேளையில், தன்னுடைய சமூக வலைதள பக்கங்ககளில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் அப்லோட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

---- Advertisement ----

அந்த வகையில், சமீபத்தில் ஊட்டிக்கு விசிட் அடித்துள்ள அம்மணி அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த இவரது ரசிகர்கள், சினிமா ஹீரோயின்களை ஓரம் கட்டிட்டீங்க.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

---- Advertisement ----