செய்திவாசிப்பாளர் பனிமலர் கோவையில் சேர்ந்தவர். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் உள்ளார். இவர் சன் தொலைக்காட்சியில் தான் தன்னுடைய பணியைத் தொடங்கினார். அதன் பின்னர் பாலிமர், புதிய தலைமுறை, நியூஸ் செவன் என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியுள்ளார்.
மேலும், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப், கூகுள் சர்ச் என பல சமூக வலைத்தளங்களில் இவர் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் விவாகரத்து வாங்கி தனியாக வசித்து வருகிறார். பெரியார்வாதியான இவர் சமீபத்தில் ஒரு முறை பெரியார் இருந்திருந்தால் அவரையே திருமணம் செய்திருப்பேன் என கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் சாதி மறுப்பு மற்றும் மதச்சார்பின்மை என்ற பெயரில் இவர் பதிவிடும் கருத்துக்கள் தொடர்ந்து ஒரு சாராரையே விமர்சனம் செய்து வருவதால் அந்த தரப்பினர் இவருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்து பதிவிடுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது.
இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் தன்னிடம் தரக்குறைவாக சமூகவலைத்தளங்களில் வீடியோவில் பேசுபவர்களுக்கு அவர் பதிலடியாக கூறியதாவது: ‘சமூக வலைத்தளங்களில் நேரடியாக வீடியோவில் பேச வரும் சிலர் உன்னை ஆடையே இல்லாமல் பார்த்து ரசிக்க வேண்டும் என்று கூறும் ஆண்களுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்.
உன் அம்மாவிடமும் உன் வீட்டுப் பெண்களிடமும் இருப்பதுதான் என்று அனைத்து பெண்களிடமும் உள்ளது. நீ மற்ற பெண்களை அவமதிப்பதாக பேசுவதுபோல் உன்னுடைய வீட்டு பெண்களிடம் பேசுவார்கள் என்பதை மறந்துவிடாதே. குறைந்தபட்ச நாகரிகத்தோடு பொதுவெளியில் பேசுவதற்கு பழகுங்கள், நான் கஷ்டப்பட்டு செய்தி வாசித்து பணம் சம்பாதிக்கின்றேன்.
அதேபோல் சமூக வலைதளங்களிலும் பேசி வருகிறேன். ஆனால் நீ எந்த வேலையும் பார்க்காமல் பெண்களை அவமதிப்பது ஒன்றை மட்டுமே வேலையாக பார்த்து வரும் உன்னை எல்லாம் நான் ஒரு மனிதனாக மதிக்க வில்லை. தற்போது ஆட்சி மாறி விட்டது.காவல் துறையில் ஒரு புகார் அளித்தால் அடுத்த சில மணி நேரங்களில் உன்னை கைது செய்ய முடியும்.
ஆனால் உன்னை எல்லாம் ஒரு மனிதனாகவே நினைக்கவில்லை என்பதாலும் ஒரு புழு பூச்சி போல நினைப்பதாலும் தான் நான் புகார் அளிக்கவில்லை. ஆனால் எல்லை மீறினால் புகார் அளிக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
மேலும், ஒரு முறை கடை திறப்பு விழாவிற்கு வரவேண்டும். எவ்வளவு காசு வாங்குவீங்க என்று எனக்கு ஒருவர் மெசேஜ் செய்தார். நானும் கூறினேன். சிறிது நேர உரையாடலுக்கு பின்னர் என்ன வேணும்னாலும் பண்ணுவீங்களா..? நான் ஒரு லட்சம் தருகிறேன். என்னுடன் ஒரு நாள் மட்டும் தங்குங்கள் என்று ஒருவர் பேசினார் என்றும் கூறிய அவர் அதற்க்கான ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.