நாங்களும் ஹனிமூன் போட்டோ போடுவோம்..! – தீயாய் பரவும் நிக்கி கல்ராணி – ஆதி புகைப்படங்கள்..!

நிக்கி கல்ராணி : நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மட்டும்தான் கல்யாணம் ஆயிருக்கா..? ஏன் எங்களுக்கு ஆகலையா..? அவங்க மட்டும்தான் ஹனிமூன் போகணுமா..? ஏன் நாங்க போக கூடாதா..? என்று கேட்பதுபோல நடிகர் ஆதி, நிக்கி கல்ராணி ஜோடி தங்களுடைய ஹனிமூன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார்கள்.

தமிழில் டார்லிங் என்ற பேய் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி மற்றும் பிரபல நடிகர் ஆதி இருவரும் மரகதநாணயம் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர்.

இந்த திரைப்படத்தின் நடித்தபோது அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பு காதலாக மாறி தற்போது இருவரும் கணவன் மனைவியாக தங்களுடைய வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வருகிறார்கள்.

தமிழில் யாகாவராயினும் நாகாக்க, கோ 2, கலகலப்பு-2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மரகதநாணயம், ஹரஹர மஹாதேவகி, ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் உள்ளிட்ட ஏனைய தென்னிந்திய மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் விருப்பமான கதாநாயகியாக திகழ்ந்தவர்.

தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நிக்கிகல்ராணி அவனுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது தனது கணவர் ஆதியுடன் ஹனி மூன் சென்றுள்ள புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …