வித்தியாசமான கதையம்சம் கொண்ட மிருகம் பட நாயகன் ஆதியின் மற்றும் நிக்கியோட ரொமான்ஸ் வீடியோவை பாத்திட்டிங்களா?

ஆதி பினிசெட்டி என்ற பெயரை  ஆதி என்று சுருக்கிக்கொண்டு தெலுங்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிருகம் என்ற படத்தில் அறிமுகமான நடிகர் தான் இவர். மிருகம் படம் மிகவும் வித்தியாசமான கதையம்சம் கொண்டது முதல் படத்திலேயே இப்படி ஒரு கதையை தேர்வு செய்து நடித்த ஆதி என்ற படத்தில் மிகவும்  குண்டாக காணப்பட்டார்.

இந்த படத்திற்கு பின்னால் இவர் தமிழில் ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவான், வல்லினம், கோச்சடையான், யாகாவாராயினும் நாகாக்க, மரகதநாணயம் போன்ற பல தமிழ் படங்களில் நடித்து அபரிமிதமான பாராட்டுகளை பெற்றவர்.

மேலும் இவர் நடித்த படங்கள் எல்லாவற்றையும் நீங்கள் உற்று பார்க்கும்போது ஒவ்வொரு படத்திலும்  வேறுவிதமான கதாபாத்திரத்தில்  நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

இவரோடு யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் படத்தில் நடித்த கதாநாயகி நிக்கி கல்யாணி, இளசுகளின் இதயத்தை திருடியவர் என்று கூறும் அளவுக்கு கனவுக்கன்னியாக இருந்தார்.

ஆதிக்கி நிக்கியோடு காதல் ஏற்பட்டது. இந்த காதல் வளர்ந்த போதே கடந்த மார்ச் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் மே மாதம் திருமணம் பட் என்று நடந்தி முடித்தனர். திரைத்துறை பிரமுகர்கள் அனைவரும் இவருடைய திருமணத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள் மேலும் சில முக்கிய நடிகர்கள் நேரில் சென்று வாழ்ந்தார்கள். இதனை அடுத்து இவரது திருமண ஆல்பம் மற்றும் படங்கள் இணையத்தில் பரவி பலரது லைக்கை பெற்றது.

 தற்போது இவர்களுக்கு திருமணமாகி 100நாள் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாவது ஹனிமூனுக்காக கலிபோர்னியாவுக்கு சென்றிருந்தார்கள் அங்கு அவர்கள் எடுத்த புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் பதிவிட அது மிகவும் டிரெண்ட் ஆனது.

 மேலும் இந்த தம்பதிகள் இன்ஸ்டாவில் தங்களது ரொமான்டிக்கான வீடியோக்களை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோக்களை பார்த்து அனைத்து ரசிகர்களும்  வேறு விதமான கருத்துக்களை பதிவு செய்து இருப்பதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து இருக்கிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …