முன்னாள் காதலன்.. நிரூப்புடன் சேர்ந்து தம் அடிக்கும் அழகி அபிராமி..! – வைரல் வீடியோ..! – விளாசும் ரசிகர்கள்..!

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் அல்டிமேட் ( BiggBoss Ultimate ) நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார்.

புகழ் பெற்ற பிக்பாஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி, தமிழில் ஐந்து சீசன்களை முடித்து தற்போது ஓடிடி தளத்திற்குள்ளும் அடியெடுத்து வைத்திருக்கிறது. பழைய சீசன்களின் போட்டியாளர்கள், நிகழ்ச்சியில் தணிக்கை இல்லை, முதல் நாளே நாமினேஷன் என, ‘பிக்பாஸ் அல்டிமேட்’தான் இப்போது சமூக வலைதளங்களின் பேசுபொருளாகி இருக்கிறது.

குறிப்பாக இதில் கலந்துகொண்டுள்ள நிரூப்பும், அபிராமியும் முன்னாள் காதலர்கள். 3 வருடம் காதலித்த இவர்கள், பின்னர் பிரேக் அப் செய்து பிரிந்தனர். பிக்பாஸ் வீட்டில் புகைபிடிப்பதற்கு என தனியாக ஒரு சிறிய அறை இருக்கும். அந்த அறையினுள் போட்டியாளர்கள் புகைபிடிப்பதை இதுவரை ஒளிபரப்பியது இல்லை.

ஆனால் தற்போது நடைபெறும் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி-க்கானது என்பதால், அந்த காட்சிகளை எடிட் செய்யாமல் நேரடியாக ஒளிபரப்பி உள்ளனர்.அதன்படி நடிகை அபிராமி தனது முன்னாள் காதலன் நிரூப் மற்றும் சக போட்டியாளர்களான அபிநய், ஷாரிக் ஆகியோருடன் இணைந்து சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டதற்கு கடும் கண்டனம் ஒருபுறம் எழுந்து வந்தாலும், மறுபுறம் ஒரு பெண் எப்படி சிகரெட் பிடிக்கலாம் என அபிராமிக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

அதேவேளையில், அது அவரது தனிப்பட்ட விஷயம், அதை கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

இணையத்தில் கசிந்த ராஷ்மிகா மந்தனா தனுஷ் ஒன்றாக இருக்கும் வீடியோ… இதோ..

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இடத்தில், முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் அருண் மாதேஸ்வரன் …