என்னை கீழே தள்ள பாக்குறாங்க.. நடிகை நித்யா மேனன் பரபரப்பு குற்றச்சாட்டு..!

நடிகை நித்யா மேனன் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதனை தொடர்ந்து வெப்பம் மாலினி 22 பாளையங்கோட்டை ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

குறிப்பிட்டு சொல்லும்படி இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மணி என்ற திரைப்படத்தில் அவர் நடித்தது இவருக்கென தனி அடையாளத்தை கொடுத்தது. இந்த திரைப்படம் நித்யா மேனனின் திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

அந்த வகையில் தற்போது நடிகர் தனுசுக்கு ஜோடியாக திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படத்தில் நித்யாமேனன் நடித்திருந்தது ரசிகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் நித்யா மேனன் கதை கூற அழைத்ததாகவும் ஆனால் நடிகை நித்யா மேனன் அவரை சந்திக்க மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகின.

இதனை தொடர்ந்து நித்யா மேனன் திமிர் பிடித்தவர் என்றும் அவர் மலையாள படங்களில் நடிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த இயக்குனர் தயாரிப்பாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து அதனுடைய விளக்கத்தை கொடுத்து இருக்கிறார் நடிகை நித்யாமேனன்.

அவர் கூறுகையில் நான் மிகவும் திமிர் பிடித்தவள் என்று திரைத்துறையில் பலரும் நினைக்கிறார்கள். ஆனால், அதில் உண்மை கிடையாது. சினிமா துறையில் எனக்கு நிறைய எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் விரும்பியபடி நான் செய்யாத பொழுது என்னுடைய பெயரை கெடுக்கும் விதமான பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள்.

என்னுடைய வளர்ச்சியை பார்க்க முடியாதவர்கள் என்னை கீழே தள்ளி விட முயற்சி செய்கிறார்கள். இதுவரை என்னுடன் நடித்த யாராவது என்னைப் பற்றி ஏதாவது புகார் கொடுத்து அல்லது குற்றச்சாட்டு கூறிய பார்த்திருக்கிறீர்களா..? கிடையாது.

ஆனால் என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் சினிமா துறையில் சிலர் என் மீது குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். மேலும் நான் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் போலியான தகவல்களை பரப்புகிறார்கள்.

இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எந்த யோசனையும் என்னிடம் இல்லை அதுதான் உண்மை எனக்கு திருமணம் நடக்கும் போது கண்டிப்பாக நான் கூறுவேன் அனைவருக்கும் கூறுவேன் என்று கூறியிருக்கிறார் நடிகை நித்யாமேனன்.

வளரும் நடிகையாக இருக்கும் நடிகை நித்யா மேனனின் வளர்ச்சியை பிடிக்காத அந்த நடிகர்கள் யார் இயக்குனர்கள் யார் என்று பெரிய விவாதமே இணையத்தில் நடந்து வருகின்றது.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …