படத்துல தான் அப்டினா..? நிஜத்திலும் அப்படியா..? – நித்யா மேனன் வெளியிட்ட புகைப்படம்..! – அதிர்ந்து போன ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன் தற்போது மாடர்ன் லவ் என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த வெப்சீரிஸ் ஆறு பாகங்களாக இருக்கும் நிலையில் அதில் ஒரு பாகத்தில் பிரபல நடிகை ரேவதி மற்றும் நித்யா மேனன் இடம்பெறும் தொடரும் உள்ளது. இந்த தொடரின் படப்பிடிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் ரீரிக்கார்டிங் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

சமீபத்தில் கால் தவறி விழுந்ததில் அதன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது அவருக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு காலில் கட்டுடன் டப்பிங் பணியை செய்யும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது .

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை நித்யா மேனனின் சினிமா குறித்தான அர்ப்பணிப்பை பார்த்து வாயடைத்து போயுள்ளனர்.

என்னதான் பணம் புகழ் இருந்தாலும் இன்னும் ஒரு மாதம் பணிகளை ஒத்தி வைக்கலாம் என்ற சூழ்நிலை இருந்தாலும் தயாரிப்பாளரின்நிலைமையை கருத்தில் கொண்டு நடிகை நித்யா மேனன் இப்படி கஷ்டமான சூழலிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகிறார் என்று வியந்து வருகின்றனர்.

---- Advertisement ----

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்.. நடிகை நித்யா மேனன் கீழே விழுந்து கால் முறிந்த சில நாட்களுக்கு முன்புதான் வெப்சீரிஸில் கால் உடைந்தது போல சில காட்சிகளில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காட்சிகள் படமாக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் நடிகை நித்யா மேனன் நிஜமாகவே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து காலை முறித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----