விஜய் டிவி-யில் சூப்பர் சிங்கரில் ஆரம்பமான நித்யஸ்ரீ, வட இந்தியா வரையிலான பல போட்டிகளில் பங்குபெற்று, வெற்றி பெற்றிருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என ஏராளமான மொழிகளிலும் பிசிரில்லாமல் பாடுபவர்.
வெவ்வேறு மொழிகளில் இருக்கும் பாடல்களை ஒன்றாக இணைத்து பாடுவது இவரது ஸ்பெஷல்.தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளிலும் பாட்டுப் பாடுவதில் கில்லாடி இவர்.
சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஆரம்பித்தவருக்கு தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள்.
பாடகியாச்சே, வெறும் பாடல்கள் வீடியோக்கள் மட்டும்தான் இருக்கும் என்று நினைத்தால், அதுதான் தவறு. பாடல்கள் மட்டுமல்ல, Vlog, யோகா, போட்டோஷூட், பிறந்தநாள் கொண்டாட்டம், அழகு குறிப்புகள், நடனம் என ஏராளமான வெரைட்டிகளில் காணொளிகள் உள்ளன.
இயக்குனர் ரவிஅரசு இயக்கிய ‘ஈட்டி’ படத்தில் ஹீரோ அதர்வாவுக்கு தங்கையாக நடிக்க, துருதுருன்னு ஒரு பொண்ணு வேணும்னு தேடிக்கிட்டு இருந்தார். அந்த நேரம் தங்கச்சி கேரக்டர்ல நம்ம நித்யஸ்ரீ தான் நடிச்சி இருந்தாங்க.
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலின் கவர் பாடலுக்கு நடனம் அமைக்கும் போது விபத்து ஏற்பட்டது. இது எல்லாவற்றையும் தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவு செய்திருந்தார் நித்யஸ்ரீ.
இணையத்தில் பிரபலமாக வலம் வரும் அம்மணி அடிக்கடி லைட் க்ளாம் வகையான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். அந்த வகையில், தற்போது தொப்புள் தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருவதுடன் அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.