நிவேதா பெத்துராஜ் ( Nivetha Pethuraj ) தமிழ் சினிமாவில் ஒரு ஹோம்லி நடிகை என்று சொல்லலாம். பாவாடை தாவணியும் இவருக்கு பொருந்தும், மாடர்ன் உடையிலும் கவர்ந்திழுப்பார்.வெகு சில நடிகைகளுக்கே இந்த அம்சம் அமையும். 2016-ல் ஒரு நாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமான நிவேதா, ஜெயம் ரவி, உதயநிதி, விஜய் ஆண்டனி ஆகிய நடிகர்களுடன் ஜோடி போட்டிருந்தாலும், இவரது படங்கள் பெரியளவில் இதுவரை வெற்றிப் பெற்றதில்லை.
இருப்பினும், தமிழில் பார்ட்டி, ஜகஜால கில்லாடி, பொன் மாணிக்கவேல், சங்கத் தமிழன் ஆகிய படங்கள் இவருக்கு அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.தவிர, தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘அலா வைகுண்டபுரம்லோ’ படத்திலும் கவர்ச்சி ததும்ப நடித்திருந்தார் அம்மணி.
இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வரும் நிவேதா பெத்துராஜ் கடந்த 2015-ம் ஆண்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் பெண் உறவு குறித்த தத்துவத்தை பகிர்ந்துள்ளார். அந்த விஷயங்களை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம்.”Lisa Chase Patterson” என்பவர் கூறிய அந்த கருத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நிவேதா பெத்துராஜ்.
ஆராவுடன் ஆரா கலப்பது…
அதில் கூறியுள்ளதாவது, “உங்களுடைய ஆத்ம உணர்வை யாருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் கவனமாக இருங்கள்.இந்த நெருக்கம் உங்களின் ஆரா-வையும், அவரது ஆரா-வையும் ஒன்றிணைக்கிறது. (ஆரா என்பது உயிர் புலம் என அர்த்தம் கொள்ளலாம். காந்தத்திற்கு எப்படி அதனை சுற்றி காந்த புலம் உண்டோ அது போல உயிருக்கும் உண்டு.
அதை AURA (ஆரா) என்கிறார்கள்).இது சக்தி வாய்ந்த பிணைப்பு, நீங்கள் ஒருவருடன் எவ்வளவு நெருக்கமாக தொடர்பு கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு அவர்களது ஆரா உங்களுடைய ஆரவுடன் கலக்கும். யோசித்து பாருங்கள், பல பேரின் பல ஆரா-க்களுடன் கலந்த ஒருவரது ஆரா எப்படி குழம்பி போயிருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
அந்த குழப்பமான ஆரா நேர்மையான எண்ணங்களை தவிர்த்து விட்டு, எதிர்மறையான எண்ணங்களை ஈர்க்கும் படி அமைந்து விடும். எனவே நமக்கு விருப்பமான, நல்ல நபர்களுடன் மட்டுமே நம்முடைய தொடர்பு இருக்க வேண்டும். எதிர்மறையாக பேசக்கூடியவர்களை தவிர்த்து விட வேண்டும் என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.