சுகப்பிரசவம் ஆக செய்ய வேண்டியது…

தாய்மைப்பேறு என்பது பெண்களுக்கு கிடைக்கும் ஒரு உச்சகட்ட மரியாதையும் பெருமையும் ஆகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஏகப்பட்ட மாற்றங்களை சந்திக்க நேரிடும். அந்த மாற்றங்களை  சந்திப்பது இயல்பானவை தான். இதனை எண்ணி பயம் கொள்ளக்கூடாது. மாறாக 9 மாதங்களும்  எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு செய்தார்கள் என்றால் ஆரோக்கியமான குழந்தை உடன் சுகப்பிரசவமும் ஏற்படும்.

கர்ப காலத்தில்…

கர்ப்பம் தரித்த முதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவுகளை உணவு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி ,பிரமி போன்ற மூலிகைகளுடன் தேன் மற்றும் நெய் சேர்த்து கலந்து கொடுக்க வேண்டும். 

கர்ப காலத்தின்போது சிலருக்கு கை ,கால் ,வீக்கம் வருவது இயல்பு இப்படிப்பட்டவர்கள் நெல்லிக்காய், முருங்கைக்காய் ,முள்ளங்கி சாப்பிடலாம். ஒரு ஸ்பூன் சோம்பை எடுத்து நன்றாக வறுத்து வெடிக்கும் போது தண்ணீர் விட்டு காய்ச்சி குடித்தால் கால் வீக்கம் குறையும்.

அதுபோல் சூடு தணிய வேண்டும் என்று நினைப்பவர்கள் சீரகத்தை வறுத்து தண்ணீர் விட்டு ஒன்றுக்கு அரை பங்காக குறுக்கி குடித்து வர அடி வயிற்று வலி குறையும்.

சுகபிரசவம் ஆக…

👍மூன்றாம் மாதம் துவக்கம் முதல் பிரசவ காலம் வரை வெந்தய கஞ்சி சாப்பிடுவது சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

 👍ஐந்தாம் மாதத்தில் இருந்து ஒரு டம்ளர் அரிசி கொதி நீரில் சிறிதளவு வெண்ணையை கலந்து மதிய நேரத்தில் சாப்பிட்டால் நிச்சயமாக சுகப்பிரசவம் ஏற்படும் .

👍கர்ப்ப காலம் முதல் பிரசவ காலம் வரையில் சின்ன வெங்காயம் சீரகம் சேர்த்த முருங்கைக்கீரை சூப் வைத்து குடிப்பதின் மூலம் பிரசவம் ஆகும்.

👍பிரசவ நாள் நெருங்கும் நேரத்தில் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படும் இதற்கு வெற்றிலை, ஓமம், பூண்டு சேர்த்து கசாயம் வைத்து சாப்பிடலாம்.

சாதாரண வலி என்றால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். கர்ப்பிணிகள் 7வது மாதத்தில் இருந்து கடைசி மூன்று மாதங்கள் தங்களது உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நம் பாரம்பரிய மருத்துவம் கூறுகிறது. கர்ப்பிணி பெண்கள் மூன்று மாதத்திற்கு பின்பு துளசி இலைகளை கொதிக்க வைத்து மூலிகை தேநீராக அருந்துவதின் மூலம் பிரசவம் எளிதாகும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

அந்த மூடு வந்தா இதைத்தான் பண்ணுவேன்.. கூச்சமின்றி ஓப்பனாக சொன்ன ரேஷ்மா பசுபுலேட்டி..!

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு தன் ரசிகர்களை குஷிப்படுத்துபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் …