ப்பா… சமந்தாவா இது..? – இணையத்தில் கசிந்த.. ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா..! – வீடியோ பாடல்..!

பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் (Allu Arjun) நடித்துவரும் படம் ‘புஷ்பா’. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்தும்… அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் மிரட்டல் வில்லனாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதுதவிர ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். புஷ்பா படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் ட்ராக் வெளியானது.

தெலுங்கில் ஊ அண்டவா மாவா… ஊஊ அண்டவா மாவா என்றும் தமிழில் ஊ சொல்றியா மாவா… ஊஊ சொல்றியா மாவா என்றும் இப்பாடல் வெளியானது.இதேபோல் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது. இதில் ஆண்களின் புத்தி அலையிற புத்தி என்பதை போன்ற வரிகள் இடம்பெற்றதால் இப்பாடலுக்கும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்தது.

படம் வெளியாகியுள்ள நிலையில், இந்த பாடலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், சமந்தாவா இது..? என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நம்ம லியோ தாஸ் தங்கச்சியா இது..? மோசமான கவர்ச்சி.. தெறிக்க விட்ட மடோனா செபாஸ்டியன்..

மடோனா செபாஸ்டியன் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் பாடகி ஆவார், அவர் முதன்மையாக மலையாள திரைப்படங்களில் பணியாற்றுகிறார். அவர் …