படப்பிடிப்பு தளத்தில் அந்த கறியை சாப்பிட கொடுத்த கமல்ஹாசன்.. அதிர்ச்சியான ஊர்வசி..

நடிகை ஊர்வசி படப்பிடிப்பு தளத்தில் மதிய உணவு சாப்பிடும் பொழுது நடிகர் கமலஹாசன் அந்தக் கறியை கொடுத்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று பேசி இருக்கிறார்.

நடிகை ஊர்வசி. இவருடைய உண்மையான பெயர் கவிதா ரஞ்சனி ஆகும். கடந்த 1979 ஆம் ஆண்டு கதிர் மண்டபம் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்சிகள், ரியாலிட்டி விளையாட்டு நிகழ்ச்சிகள் போன்றவற்றையும் நடித்திருக்கிறார். தொகுப்பாளினியாக, நடுவராக, சிறப்பு விருந்தினராக என பல்வேறு கலந்து கொண்டு இருக்கிறார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஒரு முறை கமலஹாசனுடன் படப்பிடிப்பு தளம் ஒன்றில் இருந்த பொழுது இன்று எல்லோரும் ஒன்னா உக்காந்து லஞ்ச் சாப்பிடுறோம் சரியா.. என்று கேட்டார். எப்பவுமே இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் மிரட்டும் தொணியில் தான் கூறுவார்.

ஆனால், நான் என் வீட்டிலிருந்து மீன், நண்டு, முட்டை, இறால் ஆகியவை எல்லாம் வந்திருக்கும். எனவே நான் தனியாக அமர்ந்து கொண்டு சாப்பிட்டு கொண்டு இருப்பேன்.

ஒருமுறை ஏதோ வட்ட வட்டமாக ஒரு பிளேட்டில் வைத்து இந்தாங்க இன்னைக்கு இதுதான் ஸ்பெஷல் ரோஸ்ட் என்று கொடுத்தார்.

நானும் வாங்கி பார்த்தேன்.. அது என்ன என்று அப்போது எனக்கு தெரியவில்லை.. அருகில் அமர்ந்திருந்த நடிகை அனுராதா.. அது பாம்பு கறி.. சாப்பிடாத என்று கூறினார்.

எனக்கு பக்கென ஆகிவிட்டது. என்னது பாம்பு கறியா..? என்று கத்தி விட்டேன். இந்த விஷயம் கமல்ஹாசன் காதில் விழுந்து விட்டது. உடனே வந்து.. யார் சொன்னது..? எது பாம்பு கறி என்று கேட்டார்.

நான் ஏதோ அனுராதா தான் இப்படி சொன்னால் என கூறிவிட்டேன். நீங்கள் சும்மா இருக்க மாட்டீர்களா..? அதையெல்லாம் எதுக்கு சொல்லிட்டு இருக்கீங்க.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீங்கள் சாப்பிடுங்க என்று ஒரு கிண்டலாக பேசினார் கமல்ஹாசன்.

அப்போது எனக்கு தூக்குவாரி போட்டது… ஒருவேளை, நிஜமாகவே பாம்பு சரியாக இருக்குமோ என்று..! அதன் பிறகு தான் அது கணவாய் மீன் என்று எனக்கு தெரிய வந்தது கூறியிருக்கிறார்.