.”உங்க செடிகளுக்கு தெளிக்க கூடிய இயற்கை பூச்சி கொல்லி..!” – நீங்களே தயாரிக்கும் முறைகள்..!

 இயற்கை பூச்சி கொல்லி: இன்று மாறி வரும் மாசு நிறைந்த சுற்றுச்சூழல் மற்றும் காய்கறி, பயிர் உற்பத்திக்காக அதிகளவு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்புகளை அறிந்து  கொண்ட மக்கள் தற்போது அவரவர் வீடுகளில் மாடித்தோட்டம்,  காலியாக இடம்  வைத்து இருப்பவர்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை எவ்வித ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் விளைவிக்கக்கூடிய வகையில்  விழிப்புணர்வுடன் நகரத்தில் உள்ள மக்கள்  தங்கள் வீடுகளில் காய்கறித் தோட்டங்களை அமைத்து வருவது அதிகரித்த வண்ணமாக உள்ளது.

pesticide

வீட்டு தோட்டம் மற்றும் மாடி தோட்டத்தில் எண்ணற்ற வகையான காய்கறிகளை பயிரிட்டு வருகிறார்கள். அதில் குறிப்பாக வெண்டைக்காய்,கத்திரிக்காய், தக்காளி, முருங்கை மற்றும் கொடி வகைகளாக பீர்க்கங்காய், அவரை,பீன்ஸ், பூசணிக்காய், சுரைக்காய் போன்றவற்றை கூறலாம் இதோடு  கொத்தமல்லி ,கீரை வகைகள்  போன்றவற்றையும்  வளர்த்தி வருவார்கள்.

செடிகளுக்கு போதியளவு சத்துமானம் மண்ணில் இருக்கும் பொழுதுதான் அவை செழித்து வளரும். அவை குறையும் போது தான் எண்ணற்ற நோய்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்கவும், பூச்சிகளின் தாக்குதலை இயற்கையான முறைகளில் சரி செய்ய கூடிய எளிமையான வழிகளை  காணலாம்.

வேப்பிலை கரைசல்:

வேப்பிலை ஒரு இயற்கையாக அமைந்த ஒரு பூச்சிக் கொல்லியாகும். கால் கிலோ வேப்பிலையை நன்றாக அரைத்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகளில்  தெளித்து வர அனைத்து வித பூச்சிகளும் உங்கள் செடிகளை நெருங்காது. பூச்சிகள் செடிகளின் இருக்கும் பட்சத்தில் அதன் இனவிருத்தி  குறைந்துவிடும். எனவே மாதத்தில் இரண்டு முறை இதை செய்து பாருங்கள்.

---- Advertisement ----

பூண்டு, மஞ்சள் மற்றும் வெங்காய கரைசல்:

pesticide

100 கிராம் பூண்டு மற்றும் 100 கிராம் வெங்காயம் இவற்றை நன்றாக வெட்டி  மிக்ஸியில் மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இதனுடன் 25 கிராம் மஞ்சள் பொடியை சேர்த்துக் கொள்ளவும் இதை நன்றாக கலக்கி ஒரு லிட்டர் தண்ணீரில் சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே வைத்து விடுங்கள்.

மறுநாள் காலை எழுந்ததும் இவற்றை உங்கள் செடிகளுக்கு தெளிப்பதன் மூலம் எத்தகைய பூச்சிகளையும் விரட்டியடிக்க கூடிய தன்மை இந்த இயற்கை பூச்சி கொல்லிக்கு உண்டு. மாதத்தில் ஒரு முறை இதைச் செய்தாலே போதும் எந்தவித பூச்சிகளின் தாக்குதலுக்கும்  செடிகள் ஆளாகாது.

மிளகு மற்றும் உப்பு கரைசல்:

pesticide

100 கிராம் உப்பினை நன்றாக ஒன்றரை லிட்டர் தண்ணீரில் கலக்க வேண்டும் பின்பு 25 கிராம் பொடியாக்கிய மிளகினை இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள் வாரம் ஒரு முறை  உங்கள் தோட்டத்தில் இருக்கும் செடிகளின் மீது தெளித்து வர வேண்டும் அவ்வாறு தெளிப்பதன் மூலம் எவ்வித பூச்சிகளின் தாக்குதலுக்கு உட்படாமல் இருக்கும் மேலும் அதில் பூச்சிகள் இருந்தால் அவற்றை அது கொன்றுவிடும்.

இதனை நீங்கள் தெளிக்கும்போது அப்பூச்சிக்கொல்லி கரைசலானது உங்கள் செடிகளின் வேர்களில் விழந்து விடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அப்படி விழுந்தால் முற்றிலும் உங்கள் செடி முற்றிலும் அழிந்து போக வாய்ப்புள்ளது. எனவே இதனை செய்யும் போது மிகவும் கவனமாக செய்யுங்கள்.

மேற்கூறிய மூன்று வகையான இயற்கை பூச்சிக்கொல்லிகளை உங்கள் வீட்டுத் தோட்டங்களில் பயன்படுத்தி பூச்சிகளில் இருந்து உங்கள் தோட்டத்தை காத்து  அதிக மகசூலையும்  பெறுங்கள்.

---- Advertisement ----