“எனக்கு கல்யாணம் ஆகல.. ஆனால், அது இருக்கு…” – நடிகை ஓவியா வெளிப்படையான பேச்சு..!

நடிகை ஓவியா தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்தாலும் கூட பல்வேறு சர்ச்சையான பேச்சுக்கள் மற்றும் சச்சையான படங்களில் நடித்த தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்ட ஒரு ஆள்.

இது குறித்து அவரிடம் கேட்டால் நான் யாருக்காகவும் பயப்பட தேவையில்லை. யாராவது என்னை வெறுத்து விடக்கூடாது என்பதற்காக என்னுடைய தன்மையை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

நான் நானாகத்தான் இருக்கிறேன். நான் இப்படித்தான் இருப்பேன். என்னை பிடித்தவர்களுக்கு பிடிக்கட்டும். பிடிக்காதவர்களுக்கு என்னை பிடித்து தான் ஆக வேண்டும் என்று நான் எதிர்பார்க்கதில் எந்த ஒரு நியாயமும் இல்லை என பேசி இருந்தார்.

தமிழில் களவாணி, மதயானை கூட்டம், கலகலப்பு, மெரினா, மூடர்கூடம், யாமிருக்க பயமேன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஓவியா.

பிக் பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு அடுத்த முதலமைச்சர் இவர் தான் என்ற அளவுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகை ஓவியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்றும் அதனை அவர் மறைத்து வருகிறார் திருமணமானதை கூறினால் பட வாய்ப்பு கிடைக்காது என்பதால் அந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்கிறார் என்று வதந்திகள் சில இணையத்தில் பரவ தொடங்கியது.

இந்நிலையில் இது குறித்து நடிகை ஓவியாவிடம் பேட்டி ஒன்றில் கேட்கப்பட்டது. உண்மைதான் எனக்கு குழந்தை இருக்கிறது என்பது உண்மைதான்.

ஆனால் எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என்னுடைய நாய்க்குட்டி தான் என்னுடைய குழந்தை. அதை குழந்தை போல தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என கூறி இருக்கிறார்.

ஓவியா ஒருவேளை நான் அந்த நாய்க்குட்டியை குழந்தை போல் பார்த்துக் கொள்வதால் எனக்கு குழந்தை இருக்கிறது என்று செய்திகள் பரவி இருக்கலாம் என்று தனக்கே உரிய பாணியில் தன்னுடைய சிரிப்பை சிதற விட்டிருக்கிறார் அம்மணி.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

“திருமணத்திற்கு முன்பே உடலுறவு என்பது…” – நடிகை அதுல்யா ரவி சொல்வதை கேட்டீங்களா..?

சமீப காலமாக திருமணத்திற்கு முன்பே அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் மனைவியாக இருக்கும் ஜோடிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து …