“என் கூட 6 மாசம் இரு.. பெரிய லெவல்க்கு கூட்டிகிட்டு போறேன்..” பிரபல இயக்குனர் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை புகார்..!

“என் கூட 6 மாசம் இரு.. பெரிய லெவல்க்கு கூட்டிகிட்டு போறேன்..” பிரபல இயக்குனர் மீது பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை புகார்..!

சின்னத்திரையில் சீரியல்கள் சக்கை போடு போட்டு வருகிறது. அந்த வரிசையில் விஜய் டிவியில் டிஆர்பி ரேட்டை தக்க வைத்துக்கொள்ளக்கூடிய வகையில் வெளி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம்.

இந்த சீரியல்களை பார்ப்பதற்காக இல்லத்தரசிகள் முதற்கொண்டு இளைஞர்கள் வரை தற்போது ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே தான் பல புதிய சீரியல்கள் வித விதமான சேனல்களில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா..

அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்துக் கலக்கிய லாவண்யா பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.


இவர் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர். மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சூப்பர் குயின் ரியாலிட்டி ஷோவின் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

இதனை அடுத்த தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோரில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்ததால் முறையாக நடித்து அனைவரையும் ரசிக்க வைத்ததோடு தனக்கு என்று தனி ரசிகர் படையையும் உருவாக்கிக் கொண்டார்.

காவ்யா அறிவுமணி முல்லை என்ற கதாபாத்திர ரோலை விட்டு விலகிய பிறகு அந்த கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பான முறையில் நடித்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பெயரை பெற்றிருக்கிறார்.

இயக்குனர் மீது புகார்..

இதனை அடுத்து இன்று சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரைகளிலும் அட்ஜஸ்ட்மென்ட்கள் அதிகரித்து வரக்கூடிய சூழ்நிலையில் இவர் தனக்கு நேர்ந்த அது போன்ற விஷயத்தைப் பற்றி புகார் கொடுத்து இருக்கிறார்.


இந்த புகாரில் தன்னோடு ஆறு மாசம் மட்டும் இரு உன்னை பெரிய லெவலுக்கு கூட்டிக்கொண்டு போய் விடுகிறேன் என்று கூறிய பிரபல இயக்குனர் பற்றி பகீர் தகவலை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

மேலும் இந்த பேட்டியில் அந்த நபர் தனக்கு தெரிந்த நெருக்கமான காஸ்டிங் டைரக்டர் என்று கூறியதோடு, தன்னுடன் ஆறு மாதம் வாழக்கூடிய பட்சத்தில் அவர் என்னை வேறு லெவலுக்கு கொண்டு சென்று விடுவதாக கூறியது முதலில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து அவரை தாறுமாறாக பேச வேண்டும் என்று மனதில் தோன்றினாலும், வளரக்கூடிய நிலையில் நான் அவ்வாறு பேசி விட்டால் இந்த பொண்ணு ரொம்ப மோசம் என பட்டம் கட்டி விடுவான் என்பதால் அப்படியெல்லாம் எனக்குத் தேவையில்லை எனக் கூறி ஒதுங்கி விட்டதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை லாவண்யா கூறி இருப்பது இணையத்தில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதனை அடுத்து நெட்டிசன் அனைவரும் அட.. ராமா? இப்படி எல்லாம் தொடர்ந்து நடந்து வருகிறதா? இதற்கு முடிவே இல்லையா? என்பது போல கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். மேலும் இது போன்ற சிக்கல்களில் பலரும் சிக்கித் தவிப்பதாகவும் இது போன்ற காரணத்தால் கூட முல்லையாக நடித்த விஜே சித்ரா இறந்த இருக்கலாம் என்ற விஷயமும் இணையங்களில் கசிந்து வருகிறது.

எனவே திரையுலகில் அட்ஜஸ்ட்மென்ட் பல்வேறு வகைகளில் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது என்பதை பாண்டியன் ஸ்டோர்ஸ் லாவண்யா அளித்திருக்கும் புகாரின் மூலம் உறுதி செய்யலாம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ஹபீபி.. கம் டு துபாய்.. அரபு ராணி கெட்டப்பில் சுண்டி இழுக்கும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

ஹபீபி.. கம் டு துபாய்.. அரபு ராணி கெட்டப்பில் சுண்டி இழுக்கும் எதிர்நீச்சல் ஹரிப்பிரியா..!

சமீப காலமாக திரையுலக பிரபலங்கள் பலரும் துபாய் நாட்டிற்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் …