ரசிகர்களின் அடிமடியில் கை வைத்தது போல் …காவியாவிற்கு மாற்றா…. பாண்டியன் ஸ்டோரின் முல்லை இவரா?

இளசுகள் முதல்  பெரியவர்கள் வரை பார்க்கக் கூடிய மிக முக்கியமான சீரியலாக பாண்டியன் ஸ்டோர் திகழ்கிறது இந்த சீரியல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு இந்த சீரியலுக்கு என்று ஒரு குறிப்பிட்ட குடும்ப ரசிகர் பட்டாளமே உள்ளது.

 இந்த சீரியலில் சித்ரா தற்கொலைக்குப் பின்னால் யார் இந்த கேரக்டரில் நடிப்பார்கள் என்ற எண்ணம் இருந்தது.இதனையடுத்து காவியா என்பவர் இதில் முல்லை யாக நடித்து வந்தார். தற்போதுதான் மக்கள் அவருக்கு முல்லை என்ற அந்த கேரக்டருக்கு உரிய அந்தஸ்தை கொடுத்தார்கள். இந்த நிலையில் திடீரென்று இந்த தொடரில் இருந்து அவர் விலகி இருப்பது மாபெரும் ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.

 அடுத்து மீண்டும் பாண்டியன் ஸ்டோரில் முல்லையாக  யார் நடிப்பார் என்ற கேள்விகள் எழுந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் இதற்கு பதில் அளிப்பது போல் அபிநயா என்பவர் இந்த கேரக்டரை  செய்வதாக உள்ளது. இவர் ஏற்கனவே ஒரு சீனில்  சித்ராவிற்கு தோழியாக வந்து சென்றிருக்கிறார். நிச்சயமாக அந்த கேரக்டரில் நடிக்க சரியான ஆளாக இவர் இருப்பார் என்று அனைவரும் கருதுகிறார்கள்.

 விருவிருப்பாக பரபரப்பாக சென்று கொண்டிருந்த இந்திய பாண்டியன் ஸ்டோர் இல் ஒரு சில நடிகர்களை அவ்வப்போது மாற்றுவது மிகச் சாதாரணமான விஷயம் ஆகவே மாறிவிட்டது. இந்த மாற்றம் இல்லாமல் இருந்தால் இந்த சீரியல் மேலும் மேலும்  ரசிகர்களை பார்க்கத் தூண்டும் விதமாக அமைந்திருக்கும் என்பது யதார்த்தமான உண்மையாகும்.

 இனியாவது மக்கள் விரும்பி ரசிக்கின்ற கேரக்டர்களை சற்று தூக்கி எறியாமல் பக்குவமாக கையாண்டு சீரியலை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

மேலும் இனி வரக்கூடிய இந்த அபிநயா முல்லை கேரக்டரில் நிலைத்து இருந்து சீரியல் இன்னும் இரண்டு மூன்று ஆண்டுகள் ஓடுமா என்ற கவலையில்  வயதான ரசிகர்கள் அவர்களுக்குள் முணுமுணுத்துக் கொள்கிறார்கள்.பொறுத்திருந்து பார்க்கலாம் என்ன நடக்கிறது என்பது நமக்கு நிச்சயமாக தெரியும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

இந்த வயசுலயே.. முதன் முறையாக பிட்டு பட பார்த்தேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய ஓவியா..!

2010 ஆம் ஆண்டு ஓவியா என்ற பெயர் மாற்றத்தோடு களவாணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை …