பனிமலர் பன்னீர்செல்வம் : சமீபகாலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் பிரபல செய்தி வாசிப்பாளர் பனிமலர். இவருக்கு தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பதுதான் உண்மை.
பெரியார் கருத்துக்களை தீவிரமாக பின்பற்றும் இவர் பல விஷயங்களை துணிச்சலாகவும் எந்த தயக்கமுமின்றி பொதுவெளியில் பேசக்கூடியவர். செய்தி வாசிப்பாளராக இருந்த தற்போது சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
செய்திவாசிப்பாளராக.. தொகுப்பாளினியாக.. சின்னத்திரை நடிகையாக.. இருந்து தற்போது சினிமாவில் ஹீரோயினாக வலம் வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
அந்த வகையில் தானும் சினிமா ஹீரோயின் ஆகலாம் என்று நினைத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் நீச்சல் உடையில் கூட சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் பனிமலர் பன்னீர்செல்வம். செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
அதில் பெண்கள் குறித்த விஷயங்கள், ஆடைகள், சமையல் குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் போன்ற விஷயங்களை பதிவு செய்து வருகின்றார். இந்நிலையில் மொட்டை மாடியில் புடவை சகிதமாக அவர் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம ஊரு நாட்டுக்கட்ட என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.