“காட்டு தேக்கு.. தரமான நாட்டுக்கட்ட…” – மாடர்ன் உடையில் மனதை மயக்கும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சுஜிதா..!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ( Pandiyan Stores ) குடும்பத்தின் மூத்த மருமகளாக தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா தனுஷ் ( Sujitha Dhanush ), போட்டோ ஷூட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் சேலையைத் தவிர வேறு காஸ்ட்டியூமில் நடிக்காத இவர், இன்ஸ்டாகிராம்களில் மார்ட்ன் டிரஸ்ஸில் இருக்கும் புகைப்படங்களாக அப்லோடு செய்து வருகிறார்.

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் தனம் என்ற கேரக்டரில் நடித்து வரும் சுஜிதா இல்லத்தரசிகளின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வருகிறார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். 1980 களில் குழந்தை நட்சத்திரமாகக் கலக்கியவர். சுஜிதா பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் அப்பாஸ் என்ற படத்தில் கே ஆர் விஜயாவின் பேத்தியாக சினிமாவில் நடிக்க தொடங்கினார்.

பிறகு பாக்கியராஜ் மற்றும் ஊர்வசி நடித்த முந்தாணை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.குழந்தை நட்சத்திரமாக சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்த சுஜிதா இன்றுவரை, சின்னத்திரை மற்றும் வெள்ளிதிரை என இரண்டிலும் நடித்து வருகிறார்.

கவர்ச்சி காட்டுவதிலும், நெகடிவ் ரோல்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டாத அவர், சின்னத்திரையில் மட்டும் சுமார் 14 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

நடிப்புக்குப் பிறகு போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தும் சுஜிதா, தனது குழந்தைகளுடனும் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்துவார். அப்படி, அண்மையில் அவர் எடுத்த மார்ட்ன் டிரஸ் போட்டோக்களைத் தான் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

சீரியலில் சேலையில் மட்டுமே சுஜிதாவை பாரத்த ரசிகர்களுக்கு, மார்டன் டிரஸ்ஸில் பார்த்ததும் ஆச்சர்யம். பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது? கியூட்டாக இருக்கிறார் என ஆச்சர்யப்படுகின்றனர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

நடிகை சவுந்தர்யா இறந்து 20 ஆண்டுகள்.. 100 கோடி சொத்து உயில் என்ன ஆனது..? பரபரப்பு தகவல்…!

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் சினிமா ரசிகர் மத்தியில் சில நடிகைகள் எப்போதுமே நினைவில் இருப்பார்கள். அந்த …