என்னுடைய இரண்டாவது கணவர் கொடுத்த வலி… – பனிமலர் வெளியிட்ட தகவல்..! – நெட்டிசன்கள் அதிர்ச்சி..!

பிரபல செய்தி வாசிப்பாளர் மற்றும் யூடியூபருமான பனிமலர் பன்னீர்செல்வம் காதல் மற்றும் வாழ்க்கை மீதான தன்னுடைய பார்வையை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது, பள்ளி பருவத்திலேயே அனைவருக்குமே எதிர்பாலினத்தவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு ஏற்படத் தான் செய்யும். ஆனாலும் அடுத்தடுத்த கால கட்டத்தில் அந்த ஈர்ப்பினுடைய தன்மையும் வீரியமும் குறைந்து விடும்.

ஒரு கட்டத்தில் மறைந்தே போய்விடும். வளரும் இளம் பருவத்தில் வரக்கூடிய இனக்கவர்ச்சி என்ற மாயக் காதல் எனக்கும் வந்தது. வேலை செய்வதற்காக சொந்த ஊரை விட்டு விட்டு சென்னை வந்து நீண்ட நாட்களாக உடன் பயணித்த நண்பர் ஒருவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ள முடிவு செய்தேன்.

ஆனால் அந்த உறவு ஒரு கட்டத்தில் முறிந்து போனது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் காதலித்தவருடன் தான் பிரச்சினையே தவிர காதலுடன் அல்ல. அதனைத் தொடர்ந்து இரண்டாவது முறை எனக்கு ஏற்பட்ட காதலுக்கு ஆயுசு வெறும் 5 ஆண்டுகள்.

இந்த காதல் எனக்கு நிறைய காயத்தை கொடுத்தது. அதனுடைய வடு இன்னமும் இருக்கின்றது. இதனால் வாழ்க்கையை வெறுத்து வேலைக்கு கூட செல்லாமல் வீட்டிலேயே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு அடங்கிப் போனேன்.

ஒரு நாளைக்கு ஒரு வேளை தான் சாப்பிட்டேன். துக்கத்தில் தூக்கம் கலைந்துவிட்டது. ஒரு கட்டத்தில் என் மன அழுத்தத்தைக் கண்டு எனக்கே பயம். மன நல மருத்துவரை சந்தித்து ஆலோசனைப் பெற்று உடற்பயிற்சி மனப்பயிற்சி என மறுபடியும் புதிய மனுஷியாக பிறந்தேன்.

 

எந்த காதலையும் 100% நம்பக்கூடாது. அதிகபட்சமாக 99% நம்பிவிட்டு 1% எந்த மாற்றமும் நிகழலாம் என்ற ஒரு விஷயத்திற்கு ஒதுக்கிவிட வேண்டும் என்ற தத்துவம் காதலுக்கு பொருந்தும்.

எதார்த்தத்தை புரிந்து கொண்டவர்களுக்கு சிக்கல் கிடையாது. வாழ்க்கையே இவனுடன் தான்… என் வாழ்க்கை முழுதும் இவள் வரப்போகிறாள் என்று நீங்கள் நினைத்து கொண்டிருப்பதாக இருக்கலாம்.

ஆனால் சூழ்நிலை காரணமாக நீங்கள் அவரை பிரிந்து விட்டீர்கள் என்றால் அதற்காக முடங்கிப் போய்விடக் கூடாது. அடுத்தடுத்த கட்டங்களில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு பயணிக்க வேண்டும்.

இது ஒன்றுதான் உங்களை நீங்களே மீட்டெடுத்து கொள்வதற்கான ஒரு எளிமையான வழி. அந்த பிரிவு பெரும் துயரானது நீங்கள் அடுத்தடுத்து உங்களுடைய திட்டங்களை மேற்கொள்ளும் பொழுது மறைந்து போய்விடும்.

என்னுடைய முன்னாள் காதலருடன் இப்போது நான் பேசுவது உண்டு. அவர்களுக்கு குழந்தை குடும்பம் என ஆன பின்பு கூட நட்பு ரீதியாக அவருடன் பேசுவது எனக்கு எந்த சிக்கலும் கிடையாது.

ஒருவருடைய உணர்வுகளை மதிப்பது கொடுப்பது தானே உண்மையான காதலாக இருக்க முடியும் என்று காதல் குறித்து தனது பார்வையை பதிவு செய்துள்ளார் பனிமலர் பன்னீர்செல்வம்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

Suggested for You

 

Check Also

என்ன கீர்த்தி இதெல்லாம்..! – நைட் பார்ட்டி.. மேலாடை இறங்கியது கூட தெரியாமல் ஆட்டம்..! – வைரல் பிக்ஸ்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் இரவு நேர விருந்து ஒன்றில் கவர்ச்சி உடையில் மேலாடை இறங்கியது கூட தெரியாமல் குத்தாட்டம் போடும் …