“ஒரு நைட்டு எவ்ளோ வேணாலும் தரேன்…” – என்று கேட்டவருக்கு பனிமலர் செய்த அதிர்ச்சி வைத்தியம்..!

தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த பனிமலர் பன்னீர்செல்வம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறார். சன் தொலைக்காட்சியில் தான் தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கினார்.

அதன்பிறகு, பாலிமர், புதியதலைமுறை, நியூஸ் 7 என பல்வேறு ஊடகங்களில் பணியாற்றியிருக்கும் இவர் சமூக வலைதளங்களிலும் பிரபலமானவர் பெண்களுக்கு எதிராக நடக்கக்கூடிய விஷயங்களுக்கு துணிந்து குரல் கொடுக்கக்கூடிய ஒரு நபராகவும் அறியப்படுகிறார்.

தனிப்பட்ட முறையில் ஒரு சில அரசியல் கட்சி சார்புடையவராகவும், தீவிர பெரியார் பற்றாளராகவும் இருக்கக்கூடிய பனிமலர் சில விஷயங்களில் நடுநிலைமையோடு இருக்கக் கூடியவர்.

சரி என்ற விஷயங்களை சரி என்றும்.. தவறு என்ற பட்ட விஷயங்களை தவறு என்றும் வெளிப்படையாக பேசக் கூடிய ஒருவர் பனிமலர். மேலும், சமூக வலைதளங்களில் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொள்ளக்கூடிய ஆசாமிகளை தோலுரித்து தொங்க விடுவதும் அவருடைய இயல்பு.

அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டிருந்த ஒரு புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒருநாள் இரவு தங்க வேண்டும் அதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று வாட்ஸ் அப்பில் ஒருவர் பனிமலருக்கு தவறான முறையில் அணுகியுள்ளார்.

அந்த ஸ்க்ரீன் ஷாட்டை ஆதாரத்துடன் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார் பன்னீர்செல்வம். கடை திறப்பு விழா என்று அழைத்து ஒரு நைட்டுக்கு எவ்வளவு ரேட் வேணாலும் தருகிறேன் என்று கூறுகிறான்.. பெண் தொழில்முனைவோர் ஒரு விளம்பரம் பண்ணும்போது ஒரு மணி நேர வீடியோவால் 10 நிமிடம் அனாவசியமாக யாரையும் தொந்தரவு பண்ணாதீங்க என்று சொல்ல வேண்டியதாக இருக்கின்றது.

அப்போதும் இப்படியான சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இன்னைக்கு ஒரு அக்காவிடம் லைவ்வில் பேசி முடிந்ததும் வீடியோ காலில் வந்து நிர்வாணமாக ஒருத்தன் நிக்கிறான் என்று அழுகிறார். இது எவ்வளவு பெரிய கேவலம்.. எப்படியான சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இப்படி ஒரு பெண் தொழில்முனைவோரை தொந்தரவு செய்தால் அவர்கள் என்னதான் செய்வார்கள். இப்படிப் பெண்களிடம் நீங்கள் தவறாக நடந்து கொண்டால் உங்கள் வீட்டு பெண்ணிடமும் இப்படி யாரோ ஒருவர் நடந்து கொள்வார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

பெண்கள் இதற்கெல்லாம் பயந்துகொண்டு தங்களுடைய வேலையை செய்யாமல் இருக்கக் கூடாது. இப்படியான விஷயங்களை மிகவும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்.

அப்போது தான் இப்படியான விஷயங்களை செய்யக்கூடிய ஆண்கள் திருந்துவார்கள் என்று தன்னுடைய கருத்தை வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார் பனிமலர்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

ப்பா.. பிரம்மாண்டம்.. காயத்ரி யுவராஜ் பதிவிட்ட புகைப்படம்.. குவியும் லைக்குகள்..!

சினிமாவில் மட்டுமல்ல, சீரியலில் நடித்தாலும் நிறைய சாதனைகளை செய்ய முடியும். வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியங்களை அடைய முடியும் என்பதற்கு …