இந்தப் படத்துலயும் இதுதான் கதையா ? இயக்குனர் துவாரக ராஜாவின் படம் – பரோல்!

திரை உலகை பொறுத்தவரை சின்ன பட்ஜெட் படம் என்றாலும் கதை சிறப்பாக இருந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும்.  அந்த வரிசையில் தற்போது ட்ரிப் என்டர்டெயின்மென்ட் சார்பில் மதுசூதனன் தயாரிப்பில், இயக்குனர் துவாரக்ராஜா இயக்கிய இருக்கக்கூடிய படம் தான் பரோல். இந்த படத்தில் ஒரே குடும்பத்தைச் சார்ந்த அண்ணன் மற்றும் தம்பியின் மோதல்களை  பரோல் என்ற பெயரில்  திரையிட போகிறார்கள்.

 இந்த படத்தை குறித்து இயக்குனர் துவாரக்ராஜா கூறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கு என்று ஒரு கதை இருக்கும். அந்த கதையை பின்னால் சொல்லப்படாத அல்லது சொல்லமுடியாத கதையாக இருக்கும். அது போல தான் பரோல் படத்தின் கதையும் இருக்கிறது.

 ஓரே குடும்பத்தில் பிறந்த காரணத்தால் தனக்குப் பிடிக்காத கொலை வழக்கில் சிறையில் இருக்கும் அண்ணனை பரோலில் எடுக்க முயற்சி செய்கிறான் தம்பி அப்போது தம்பிக்கு அண்ணனுக்கும் இடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகளையும், பரபரப்பான நிகழ்வுகளை படம் பிடித்து இருக்கிறோம்.

 இது வரை திரைத்துறையை பொருத்தவரை அண்ணன் தங்கை பாசம் பெருமளவு பேசப்பட்டு இருக்கக்கூடிய படங்கள் வந்துள்ளது. ஆனால் இந்த படத்தில் அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே உள்ள ஒரு அற்புதமான பந்தத்தையும் பாசத்தையும் விளக்கி இருக்கிறோம்.

 எந்த படத்தில் பாசம் மட்டுமல்ல பாசத்தை தவிர்த்து  ஆக்ஷனிலும்  பட்டையை கிளப்பி இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை பார்த்து மகிழலாம். அதுவும் வயது வித்தியாசம் இல்லாமல் இந்த படத்தை எல்லோரும் பார்க்க முடியும் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார்.

 இந்த படத்தில் ஆர்எஸ் கார்த்திக், லிங்கா, கல்கத்தா மோனிஷா, முரளி, வினோதினி ,வைத்தியநாதன் ,ஜானகி சுரேஷ் மணி, சிவம்  உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் ராஜ்குமார் இசை அமைத்துள்ளார் மகேஷ் மற்றும் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்கள். நிச்சயமாக இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார் பரோலில் பார்க்கும்போது அது நிஜமா என்று நமக்கு தெரியவரும்.

Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை  ஃபாலோ செய்யுங்கள்.

--- Advertisement---

Check Also

பட வாய்ப்புக்காக நைட் பார்ட்டியில் நடிகை சினேகா செய்த வேலை.. அதிர வைத்த பிரபல நடிகர்..!

திரைப்படங்களில் ஹோம்லியான குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தைக் கவர்ந்த நடிகைகள் தங்களது சொந்த வாழ்க்கையிலும் அப்படியே இருப்பார்கள் …