நடிகர் பார்த்திபன் தனக்கென ஒரு பாணியில் கேள்வி பதில்களை கேட்பார். யார் கேள்வி கேட்டாலும் பதில் கூறும் விதமே இவருடைய தனி ஸ்டைல் என்று கூறலாம். வித்தியாசமான கவிதைகள் சாதாரண வரிகளை கூட அசாதாரணமாக வார்த்தை விளையாட்டுகள் மூலம் சுவாரசியமாக்க கூடிய ஒரு நபர் நடிகர் பார்த்திபன்.
ஆனால் சமீபகாலமாக இவர் ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு உள்ளாகி வருகின்றார் என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது. எந்த விழாவுக்கு சென்றாலும் விருது வேண்டும்… விருது வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார்.
அப்படி விருதுகளை வாங்கி.. அவர் என்ன செய்யப் போகிறார்..? நிஜமாகவே விருது வேண்டும் என்றால் அதற்கு உண்டான படைப்பை கொடுத்தால் விருது தானாக தேடி வரும் இவர் ஒவ்வொரு மேடையாக போய்க் கேட்பது முறையானதாக இருக்க முடியாது என்று பார்த்திபனை கலாய்க்கும் ரசிகர்கள் ஒரு பக்கம்.
மறுபக்கம் நடிகர் பார்த்திபனுக்கு அதற்கான தகுதி இருக்கின்றது அவர் கேட்பது தவறில்லை என்று பார்த்திபனுக்கு ஆதரவாக பேசும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் பார்த்திபன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர் ஒருவர் அந்த புகைப்படத்தை பார்த்து சில வார்த்தைகளை பேசிவிட்டு கடைசியாக ஒரு சின்ன ஹாய் சொல்லுங்க சார் என்று கேட்டிருக்கிறார்.
இதனை பார்த்த பார்த்திபன்.. சின்ன ஹாய் என்று பதில் கூறியுள்ளார்.
இதைப் பார்த்து கடுப்பான ரசிகர்கள் ன்நோவ்… வுட்ருனா.. என்றும் பூமர் அங்கிள்.. என்றும் கலாய் மீம்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.