விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் பவித்ரா ஜனனி ( Pavithra Janani ).விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் பவித்ரா.
இவர் விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு, ஆபீஸ், மெல்ல திறந்த கதவு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தார்.மேலும் இவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே என்கின்ற சீரியல் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்.
எப்படி வெள்ளித்திரையில் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ.அதுபோலவே சின்னத்திரையில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமா நடிகைகளுக்கு சமமாக ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இதற்கு முதல் காரணம், இணையத்தில் வித விதமான படங்களை வெளியிட்டு, ரசிகர்களுடனான தொடர்பை நீட்டித்து வருவது தான்.சென்னையில் பிறந்து வளர்ந்த பவித்ரா ( Pavithra Janani ), விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானார்.
அந்த சீரியலில் அவர் நடித்த துளசி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.சிறு வயதிலிருந்தே டான்ஸ் ஆடுவது, நடித்துக் காட்டுவது, காமெடி செய்வது, பாட்டு பாடுவது என சுட்டிப் பெண்ணாக இருந்திருக்கிறார் பவித்ரா.
விக்ரம் படங்கள் ஒன்று விடாமல் பார்க்கும் பவித்ரா, அவரை திரையில் பார்த்து நடிப்பில் நிறைய கற்றுக் கொண்டாராம்.சிக்கன் பிரியாணி என்றால் ஒரு வெட்டு வெட்டும் பவித்ராவுக்கு வெள்ளையும், நீலமும் பிடித்த நிறங்கள்.சிறு வயதிலிருந்தே டான்ஸ் ஆடுவது, நடித்துக் காட்டுவது, காமெடி செய்வது, பாட்டு பாடுவது என சுட்டிப் பெண்ணாக இருந்திருக்கிறார் பவித்ரா.
இது தற்போது இவருடைய கேரியருக்கு உதவியாக அமைந்துள்ளது. இந்நிலையில், மாடர்ன் உடையில் இவர் எடுத்துக்கொண்ட சில கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிவைரலாகி வருகின்றது.