கட்டுப்பாட்டை இழந்த கார்.. பிரபல சீரியல் நடிகை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி..!

இயற்கையாகவோ அல்லது விபத்துகளிலோ நடிகர் நடிகைகள் உயிரிழப்பது ரசிகர்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.

ஏனெனில் திரைப்படங்கள் அல்லது சீரியல்கள் வாயிலாக ரசிகர்கள் மனதில் ஒரு அபிமானத்தையும் அங்கீகாரத்தையும் பெற்று விடும் பிரபல நடிகர், நடிகைகள் திடீரென இது போன்ற விபத்துகளில் மரணம் அடைவது மிகப்பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது.

பவித்ரா ஜெயாரம்

சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 35. ஆந்திர மாநிலம் மெகபூபா நகர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த பஸ் மீது மோதியது. இந்த சம்பவத்தில் காரில் பயணித்த நடிகை பவித்ரா ஜெயராம் அதே இடத்தில் உயிரிழந்தார்.

காரில் பயணம்

தொலைக்காட்சியில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பவித்ரா ஜெயராம். இவர் கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள ஹனகிரேவுக்கு சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். செரிப்பள்ளி கிராமம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் டிவைடரில் மோதியது.

---- Advertisement ----

அப்போது ஹைதராபாத்தில் இருந்து வனப்பர்த்தி நோக்கி வந்த பேருந்து, காரின் வலது பக்கம் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் நொறுங்கியது. இதில் காரில் இருந்த பவித்ரா ஜெயராமின் உறவினர் அபிக்ஷா டிரைவர் ஸ்ரீகாந்த், சக நடிகர் சந்திரகாந்த் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

விபத்து நடந்த இடத்தில்…

விபத்து குறித்து தகவல் அறிந்து அந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயம் அடைந்த பவித்ரா ஜெயராம், விபத்து நடந்த அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

நடிகை பவித்ரா ஜெயராம் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

சமீப் ஆச்சாரியா இரங்கல்

நடிகை பவித்ராவின் மறைவுக்கு நடிகர் சமீப் ஆச்சாரியா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சமூக ஊடக பக்கங்களில் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். நீங்கள் இப்போது இல்லை என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. இது நம்ப முடியாதது. என் முதல் திரை அம்மா நீங்கள் எப்போதும் சிறப்பு வாய்ந்தவராக இருப்பீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கி பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் உடல் நசுங்கி பலியான சம்பவம், அவரது ரசிகர்களை கண்ணீர் விட்டு கதறி அழச் செய்திருக்கிறது.

---- Advertisement ----