பெண்கள் இதை செய்வதில் தவறில்லை.. – சர்ச்சையை கிளப்பி விட்ட பிரபல இளம் நடிகை..!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த டெல்லியை சேர்ந்த நடிகை பாயல் ராஜ்புட் பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் படு தீவிரம் காட்டி வருகிறார்.

குறிப்பாக, வலிமை வில்லன் கார்த்திகேயாவுடன் பாயல் ராஜ்புட் நடித்திருந்த… ‘RX 100’ திரைப்படம் இவரை மிகவும் பிரபலமடைய செய்தது.இதை தொடர்ந்து அடுத்தடுத்த தெலுங்கு பட வாய்ப்புகளை கை பற்றி நடித்து வரும் இவர்… அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்பங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கு மொழியை தொடர்ந்து தமிழிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்.

தமிழில் கோல்மால், இருவர் உள்ளம் படங்களில் நடித்தவர் பாயல் ராஜ்புட். தெலுங்கில் ஆர்எக்ஸ் படத்தில் அறிமுகமாகி அங்கு ஏராளமான படங்களில நடித்தார். சமூக வலைத்தளத்தில் பிசியாக இருக்கும் பாயல் ராஜ்புட் நடிகைகள் மது விளம்பரத்தில் நடிப்பது தவறில்லை என்றும், பெண்கள் பொழுதுபோக்கிற்காக குடிக்கிறார்கள் என்றும் கூறி இருக்கிறார். இது வைரலாகி இருக்கிறது.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: நடிகைகள் மதுபான பிராண்டின் போஸ்டர் அல்லது விளம்பரத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடும்போது பழமைவாதிகள் அவர்களை கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இதே காரியத்தை ஒரு நடிகர் செய்தால் யாரும் விமர்சிப்பது இல்லை. இதில் ஏன் ஆண் – பெண் வேறுபாடு பார்க்க வேண்டும். பெண்கள் பொழுதுபோக்கிற்காக மது அருந்துகிறார்கள். அதனால் பெண்கள் அதனை விளம்பரப்படுத்துவதில் தவறில்லை. என்று கூறியிருக்கிறார்.

---- Advertisement ----

Check Also

சூரியாவை விட பலகோடி சொத்துக்கு சொந்தக்காரி.. மும்பையில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா..?

90களில் கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. வட இந்தியாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு …