பெரும்பாலான வயதுக்கு பெண்களுக்கு அதிக அளவு முகப்பரு தொல்லை ஏற்பட்டு உள்ளது. இதற்கு காரணம் அவர்கள் உண்ணும் உணவில் ஏற்பட்ட மாற்றம் , காலநிலை மற்றும் ஹார்மோன் உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகள் என மிக எளிதில் கூறிவிடலாம்.
முகப்பருவானது எங்களை மட்டும் குறிவைத்து தாக்குவது இல்லை தற்போது ஆண்களுக்கும் இந்த தொல்லை இருந்து வருகிறது இதற்காக பல செயற்கை பொருட்களை இனத்தவரும் பயன்படுத்தி பக்க விளைவுகளை அனுபவித்து வருகிறார்கள் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் முகப்பரு மறைய என்ன செய்யலாம் என்பதை இனி பார்க்கலாம்.
முகப்பரு மறைய சில குறிப்புகள்
உங்கள் முகத்தில் இருக்கக்கூடிய முகப் பருக்கள் நீங்கி உங்கள் முகம் தேஜஸ் பெற வேண்டுமெனில் திருநீற்றுப்பச்சிலை சாருடன் வசம்பை அரைத்து பருக்களின் மீது இரவு உறங்குவதற்கு முன் பூசி அதிகாலையில் கடலை மாவு கொண்டு முகம் கழுவினால் முகப்பரு நீங்கும்.
சந்தனத்தை நன்றாக மைய அரைத்து தினமும் இரவு படுப்பதற்கு முன் முகத்தில் பூசிக்கொண்டு காலையில் குளிர்ந்த நீரில் கழுவினால் முகப்பருக்களின் வடுக்கள் கூட தெரியாத அளவு மறைந்துவிடும்.
முகப்பரு உங்கள் முகத்தில் கொழுப்புடன் பெரிதாக இருக்கக்கூடிய பட்சத்தில் அம்மான்பச்சரிசி தண்டனை உடைந்து அதிலிருந்து வெளிவரும் பாலினை முகப்பருவில் வைக்க முகப்பரு குணமாவதுடன் தழும்பும் ஆவதில்லை.
முகப்பருவினால் உங்கள் முகத்தில் ஏற்பட்டிருக்கும் கரும்புள்ளிகளை நீக்க எலுமிச்சை சாறுடன் ஜாதிக்காய் பொடியை சேர்த்து சிறிதளவு சந்தனமும் அதோடு கலந்து கொண்டு இரவில் பூசி வர கரும்புள்ளிகள் மறையும் ஆனால் இதை நீங்கள் தொடர்ந்து மூன்று முதல் ஆறு வாரங்கள் வரை பயன்படுத்தினார் மிக நல்ல நிலையில் உங்கள் முகம் பளபளக்கும்.
பார்ப்போர் கண்களை கவரும் படி உங்கள் முகம் பளபளவென பொலிவாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் வேப்பிலையுடன் மஞ்சள் அரைத்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்த பின் முகத்தை கழுவ வேண்டும் இவ்வாறு செய்வதன் மூலம் உங்கள் முகம் பளிச்சென்று எண்ணெய் வழியாத தன்மையோடு இருக்கும்.