பனிக்கரடி பற்றிய வியக்க வைக்கும் உண்மைகள்.

பனிக்கரடி அல்லது துருவக்கரடி என்று கூறப்படுகின்ற இக்கரடி கடும் உறைபனி சூழ்ந்த ஆர்டிக் பகுதியில் காணப்படக்கூடிய வெண்ணிற கரடி இனமாகும்.

 இது இறைச்சியை உண்ணக்கூடிய பாலூட்டி இனத்தைச் சார்ந்தது. மேலும் இது நீரிலும், நிலத்திலும் வாழும் அத்தோடு வேட்டையாட கூடிய சக்தி மிக்கது. 

இதன் முதன்மையான உணவு சில்லாகும். வளர்ந்த ஆண் கரடி 400 முதல் 600 கிலோ  எடையுடையது. பெண் கரடிகள் 200 முதல் 300 கிலோ  வரை எடை உள்ளது. 

---- Advertisement ----

இவற்றின் கருவுற்றிருக்கும் காலம் 240  நாற்பது நாட்கள். பொதுவாக இது இரண்டு குட்டிகள் போடும். 

இந்த வெண் நிற பனிக்கரடிகளின் உடலில் இருக்கும் ஈரலில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. 

இந்த ஈரலை உணவாக சமைத்து உண்ணும் மனிதர்கள் உடனே இறந்து விடுகிறார்கள் என்பது உண்மைதானே? ஆம் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ சக்தி இருப்பதால்தான் இதை உண்ணக் கூடிய மனிதர்கள் சில நிமிடங்களிலேயே இறந்து விடுகிறார்கள் என்று கூறுகிறார்கள். 

எதுவுமே அளவுடன் இருந்தால் மிகவும் நல்லது. இதைத்தான் நமது முன்னோர்கள் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். உடலுக்கு எல்லாம் சரியான விகிதத்தில் இருந்தால்தான் மிகவும் சிறப்பு என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. 

புவி வெப்பமடைவதால் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய அழிவில் ஆர்டிக், அண்டார்டிக் பகுதிகளிலுள்ள பனி உருகி நீராக மாறி வருகிறது. இதனால் இங்கு வாழும் பறவைகள் மற்றும் பனிக்கரடியின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

---- Advertisement ----