Breaking News

ஷவர்மா தடை..? – பின்னால் இருக்கும் அதிர வைக்கும் அரசியல்..! – பரபரப்பு தகவல்கள்..!

துண்டு துண்டாக வெட்டப்பட்ட சிக்கன கடப்பாரை மாதிரி ஒரு இரும்புக் கம்பியில் குத்தி அதை வைத்து இளம் சூட்டில் அப்படியே சுட்டு அதுக்கப்புறம் அந்த சின்னச்சின்ன துண்டுகளாக வெற்றி பன் மாதிரி இருக்கிற ஒரு ஒரு ரொட்டிடிக்குள் சிலபல சாஸ்களை ஊற்றி அந்த சிக்கனை வைத்து சுற்றி கொடுப்பதற்கு தான் ஷவர்மா.

இதனை, ரோட்டராமாக இருக்கும் கடைகளில் நிறைய பார்த்திருப்போம். ஆனால் இந்த ஷவர்மாவுக்கு பின்னாடி கடந்த ஒரு வாரமா நடந்துகொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய ஒரு அரசியலை நாம இன்னைக்கு பாக்க போறோம்.

ஷவர்மா மரணம்

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கேரளாவில் ஒரு பள்ளிச்சிறுமி ஷவர்மா சாப்பிட்டதன் விளையவாக பேதியாகி உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த, தகவல் காட்டுத்தீ போல இணையத்தில் பரவியது.

டிவி, பேப்பர், சோசியல் மீடியா என பயங்கரமாக இந்த விஷயம் பரவியதை நாம் அறிவோம். ஆனால், இதற்கு பின்னால் இருக்கிற, நாம் யூகிக்க தவறிய மிகப்பெரிய ஒரு அரசியலை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஷவர்மா சாப்பிட்டா உயிர் போகுமா..?

அது என்னவென்றால், ஷவர்மா சாப்பிட்டா உயிர் போகுமா..? அப்படின்னு கேட்டா போகாது என்பது தான் பதில். ஆனால் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட ஷவர்மாவை சாப்பிட்டால் உயிர் போகுமா..? என்றால்.. உயிர்போகும் உடல் உபாதைகள் ஏற்படும்.. எல்லாம் ஏற்படும்.

ஆனால், இது ஷவர்மாவுக்கு மட்டும் தான் பொருந்துமா..? என்றால் அதுவும் இல்லை. சுகாதாரமற்ற முறையில் எந்த உணவை தயார் செய்தாலும் அது உடல் உபாதைகளை ஏற்படுத்தி உயிரைக் கொல்லும் அளவுக்கு கூட இட்டுச்செல்லும்.

ஷவர்மா தடை..

அப்படி இருக்க தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் அமைச்சர்கள் ஏன் ஷவர்மாவை தடை செய்யவேண்டும் தடை செய்ய வேண்டும் என்று கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயத்தை ஆராய்ந்த போது பல திடுக்கிடும் சந்தேகங்கள் எழுகின்றன.

அது என்னவென்றால் இந்த ஷவர்மாவை பற்றி வேண்டுமென்றே குறிப்பிட்ட சில நிறுவனங்களால் மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் நடத்தக்கூடிய அசைவ சிற்றுண்டி மற்றும் பீட்சா, பர்கர், பொரித்த கோழி ஆகியவற்றை விற்கும் அயல்நாட்டு நிறுவனங்களின் வியாபாரம் இந்த ஷவர்மாவின் வருகைக்குப் பின்பு பெரிய அளவில் கணிசமாக குறைந்துள்ளது என்பது உண்மை.

ஷவர்மா-வால் அடி வாங்கிய பெரு நிறுவனங்கள்..

வெளிநாட்டு நிறுவனங்கள் தரும் உணவுக்கு இணையாக கிட்டத்தட்ட அதே சுவையுடன் இருக்கக்கூடிய ஷவர்மாவை இன்றைய இளைஞர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இப்படியான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றால் வெளிநாட்டு நிறுவனங்கள் நடத்தக்கூடிய குறிப்பிட்ட கடைகளுக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை தற்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு இப்படியான நிறுவனங்கள் மீது இப்படியான தாக்குதலை நடத்துகின்றன. ஏனென்றால் பொரித்த கோழி, பீட்சா, பர்கர் விற்கும் எந்த ஒரு நிறுவனமும் ஷவர்மாவுக்கு காப்புரிமை கோர முடியாது.

சுகாதாரம் தான் பிரச்சனை.. ஷவர்மா அல்ல..

அப்படியென்றால் ஷவர்மா-வை சாப்பிட வேண்டும். அது ஆரோக்கியமான உணவு என்று அர்த்தமா..? என்றால் அதுவும் கிடையாது. எந்த உணவாக இருந்தாலும், சரியாக, சுகாதாரமாக சமைக்கவில்லை. கெட்டுப்போன பொருட்களை கொண்டு சமைக்கிறார்கள் என்றால் அது ஆபத்து தான்.

இதே பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் கடைகளில் அசம்பாவிதம் நடந்தால் பிரபல தனியார் உணவகத்தில் என்பதோடு செய்தியை முடித்துவிடும் இன்றைய சமூகம், ஷவர்மா விஷயத்தை எப்படி ஊதி பெரிதாக்கு ஷவர்மா மீது பயத்தை கிளப்பிவிட்டுள்ளது என்று யோசித்து உண்மையை உணர வேண்டும்.

ஷவர்மா போன்ற துரித சிற்றுண்டிகளை விற்று பிழைப்பு நடத்தும் லட்சக்கணக்கான இளைஞர்கள் நிலை குறித்தும் சிந்திக்க வேண்டும்.

---- Advertisement ----

Check Also

பார்த்திபனின் அந்த எதிர்பார்ப்பு.. இரண்டாவது புருஷன் செய்த கொடுமை.. சீதா குறித்து பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க நினைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த …