2026 சட்டமன்ற பொதுத் தேர்தல் குறித்த எதிர்பார்ப்புகள் தற்போதே பரபரக்க தொடங்கி இருக்கிறது. அரசியல் களம் சூடு பிடிக்கா தொடங்கி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து ஒரு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பாளர்களை நியமித்து கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி கொண்டிருக்கிறார்.
கிட்டத்தட்ட திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இந்த இரண்டுக்கும் எந்த அளவுக்கு கட்டமைப்பு இருக்கிறதோ..! அதே கட்டமைப்பில் தன்னுடைய ரசிகர் மன்றங்களை வளர்த்து வந்தவர் நடிகர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அரசியல் கட்சிக்கான உட்கட்டமைப்பு என்பது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு ஏற்கனவே இருக்கிறது என்பதுதான் உண்மை. நடிகர் கமலஹாசன் போல திடீரென கட்சியை ஆரம்பித்து கட்சியின் உட்கட்டமைப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற மிகப்பெரிய வேலை நடிகர் விஜய்க்கு கிடையவே கிடையாது.
ஏற்கனவே அவர் தன்னுடைய ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி அரசியலுக்கான கட்சி உட்கட்டமைப்பை ஏற்கனவே வளர்த்து வைத்திருக்கிறார். இந்நிலையில், லயோலா முன்னாள் மாணவர்கள் நடத்திய ஈரோடு இடைத்தேர்தலை முன் வைத்து நடத்தப்பட்ட மிகப்பெரிய களஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
2026 ஆம் ஆண்டுக்கான தேர்தலில் யார் முதலமைச்சர்..? யாருக்கு எத்தனை சதவீதம் வாக்கு..? உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை கொடுக்கும் விதமாக நடத்திய ஆய்வில் அதிரடி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஒரு பக்கம் இது எல்லாம் நம்புவதா..? வேண்டாமா..? என்ற ஒரு கேள்வியும் வருகிறது. நடிகர் விஜய் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய ஆய்வில் நடிகர் விஜய்க்கு இவ்வளவு மவுசு இருக்கிறது என்று காட்டப்படுகிறதா..? அல்லது களத்தில் நிஜமாகவே அவருக்கு வரவேற்பு இருக்கிறதா..? என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இந்நிலையில், லயோலா முன்னாள் மாணவர்கள் வெளியிட்ட தகவல்களை சுருக்கமாக இங்கே பார்த்துவிடலாம். அதன்படி 2026 ஆம் ஆண்டு யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்விக்கு முதலிடத்தில் மு க ஸ்டாலின் அவர்களும், இரண்டாம் இடத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்களும், மூன்றாம் இடத்தில் நடிகர் விஜய்யும் இருக்கின்றனர்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்த முதல் வருடத்திலேயே முதல் மூன்று இடங்களுக்குள் வந்துவிட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், வாக்கு சதவீதத்தின் அடிப்படையில்
திராவிட முன்னேற்ற கழகம் கட்சி 20.40% வாக்குகளையும்
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் கட்சி 19.7% வாக்குகளையும்
நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சி 18.4% வாக்குகளையும்
பெரும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது அடிப்படையில் பார்க்கும் பொழுது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறது. ஏற்கனவே நடிகர் விஜய் அனைத்இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைப்பார் என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால், அதைப்பற்றி வாயே திறக்காமல் அமைதி காத்து வருகின்றன இரண்டு கட்சிகளும். உள்ளபடியே, தேர்தலே இன்னும் அறிவிக்கவில்லை கிட்டத்தட்ட 17 மாதங்கள் தேர்தலுக்கு இருக்கின்றன என்ற பட்சத்தில் தற்போது இரண்டு கட்சிகளும் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை தான்.
ஆனால், வரக்கூடிய இப்படியான கருத்துக்கணிப்பு முடிவுகளை வைத்து பார்க்கும் பொழுது தமிழகத்தில் புதிய ஆட்சி அமைய வேண்டுமென்றால் என்றாலும் நடிகர் விஜய்யின் கட்சி தொடர்ந்து நடத்த வேண்டும் என்றாலும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தான் முடியும் என்ற ஒரு சூழ்நிலை நிலவுகிறது.
ஒருவேளை தமிழக வெற்றிக்கழகம், அதிமுக தனித்தனியாக தேர்தலை சந்திக்கும் பட்சத்தில் அது திமுகவுக்கு சாதகமாக செல்லக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்பதை ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
அரசியல் களம் எப்படி மாறப் போகிறது என்பதை யாராலும் சொல்ல முடியாது.. எதிர் வரக்கூடிய ஒன்னரை ஆண்டுகள் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அதிரடி மாற்றங்கள் மற்றும் அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.
அடுத்த 25 ஆண்டுகளின் தலைவிதையை மாற்றப் போகக் கூடிய வருடமாக இந்த 2025 ஆம் வருடம் அமையும். 2026 ஆம் ஆண்டு தேர்தல் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது.
லயோலா நடத்திய இந்த கள ஆய்வு குறித்து உங்களுடைய பார்வை என்ன என்பதை கமெண்ட் செக்சன்ல பதிவு செய்யுங்கள்.
Loading ...
- See Poll Result