நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலில் சந்திக்கும் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், முதற்கட்டமாக தான் தொடங்கியுள்ள கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துகிறார்.
இந்த முதல் மாநாட்டிற்கான வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்சம் 25 லட்சம் தலைகளை கணக்கு காட்ட வேண்டும் என்ற முனைப்பில் ஒவ்வொரு மாவட்ட தலைமைக்கும் உத்தரவு பறந்து இருக்கிறது என கூறுகிறார்கள்.
150 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் நடைபெற உள்ள இந்த மாநாட்டின் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க தமிழக வெற்றிக்கழக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
அவர் பேசியதாவது, தளபதியின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி நடக்கிறது. எனவே 26, 27 ஆகிய இரண்டு தேதிகளிலும் உங்களுக்கு எந்த வேலை இருந்தாலும் உங்கள் மேல் அதிகாரியிடம் விடுமுறை வாங்கி வந்து கலந்து கொள்ளுங்கள்.
ஒரு வேலை உங்கள் மேலதிகாரி விடுமுறை கொடுக்க முடியாது என்று சொன்னால் உங்களுடைய வேலையும் வேணாம் உங்களுடைய காசு வேண்டாம் என்று கூறிவிட்டு வேலையை விட்டு வந்து விடுங்கள் என்று பகடியாக பேசியிருந்தார்.
இதனை கலாய்க்கும் விதமாக ரசிகர்கள் பலரும் பல்வேறு மீம்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆனால், இங்கே ஒரு ஆசாமி புஸ்ஸி ஆனந்த் சொல்வது போல வேலையை விட்டால் என்ன நடக்கும் என்பதை ஒரு வீடியோவாகவே வெளியிட்டு பார்ப்பவர்களை ரசிக்க வைத்திருக்கிறார். இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
— Karthik Ravivarma (@Karthikravivarm) October 2, 2024