ஈரோடு : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில மாதங்களாக திராவிடர்களால் பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி அவர்களை கடுமையாக விமர்சித்தும் அவர் தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்ட விஷயங்களை பட்டியலிட்டும் பொதுவெளியில் அம்பலப்படுத்தி வருகிறார்.
இதற்கு திராவிட இயக்கங்கள் மற்றும் ஈ வெ ராமசாமி ஆதரவாளர்கள் கடுமையான பதிலடிகளை கொடுத்து வருகின்றனர். இது தற்போது கைகலப்பாக மாறியிருக்கிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஈ வெ ராமசாமி ஆதரவாளர்களை நாம் தமிழர் கட்சியினர் அடித்து விரட்டியதால் அந்த இடத்தில் கைகலப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தும் அவர்களை மீறி ஈ.வெ.ராமசாமி ஆதரவாளர்களை நாம் தமிழர் கட்சியினர் தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனை தொடர்ந்து அங்கு திரண்டு வந்த ஈ வெ ராமசாமி ஆதரவாளர்கள் நாம் தமிழர் கட்சியினரை மிரட்டும் தொணியில் மோசமான வார்த்தைகளை பொதுவெளியில் பேசிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Loading ...
- See Poll Result