தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக இருக்கிறது புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்குட்பபட்ட வேங்கைவயல் கிராமத்தில் நடந்த கொடுமை. அதைவிட கொடுமை அந்த சம்பவத்தை செய்தது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுதான்.
தமிழக மக்கள் மத்தியில் ஆறாத வடுவாக இருக்கக்கூடிய இந்த விவகாரத்தை கண்டித்து அரசியல் கட்சிகள் பலவும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்திருக்கின்றன.
ஆனால், வேங்கைவயல் என்ற பெயரை கேட்டாலே மலம் கலந்த குடிநீர் என்ற ஒரு வார்த்தை தான் தமிழக மக்கள் மனதில் தோன்றக்கூடிய விஷயமாக இருக்கிறது.
அப்படியெனில், அந்த வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்..? என்று ஒரு நிமிடம் நினைத்து பார்த்தால் மனம் பதறுகிறது.
சமீபத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடிவரும் கிராம மக்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் பரந்தூருக்கு நேரில் சென்று தன்னுடைய ஆதரவை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு தெரிவித்தார்.
பரந்தூரில் என்ன பிரச்சனை என்றே தெரியாமல் இருந்த பல கோடி தமிழக மக்களுக்கு ஒரே நாளில் அங்கு என்ன பிரச்சனை என்று கொண்டு சென்றார் தவெக தலைவர் விஜய்.
விஜய்க்கு இருக்கும் அந்த பிரபலம் அவர் ஒரு பிரச்சினையை கையில் எடுத்தால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் அந்த பிரச்சனையின் மீது குவிக்கிறது.
இதனை சிறப்பான முறையில் தன்னுடைய அரசியல் பயணத்திற்காகவும், அந்த பிரச்சினையை தீர்ப்பதற்காகவும் நடிகர் விஜய் பயன்படுத்திக் கொண்டு வருகிறார். இந்நிலையில் தான், வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த மிருகங்களை இன்னமும் கண்டுபிடிக்காமல் இருக்கும் அரசை கண்டித்து வேங்கை வயல் மக்களை சந்திக்க விஜயம் செய்ய இருக்கிறார் நடிகர் விஜய் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
ஆனால், ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர வைக்கும் அளவுக்கு சில பிரத்தியேகமான தகவல்கள் தமிழக வெற்றிக்கழக வட்டாரங்களிடமிருந்து நமக்கு கிடைத்திருக்கின்றன.
அதன்படி தமிழக வெற்றி கழகம் கட்சி தொடங்கப்பட்ட நாளான பிப்ரவரி 2-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் வேங்கை வயலுக்கு விஜயம் செய்ய இருக்கிறார். அன்றைய தினம் தன்னுடைய கட்சியின் முதலாம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடுவதற்கு பதிலாக அங்கு இருக்கக்கூடிய மக்களுக்கு ஆறுதல் கூறும் விதமாகவும் அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் அந்த நாளை பயன்படுத்த உள்ளார் தவெக தலைவர் விஜய் என்று கூறுகிறார்கள்.
மட்டுமில்லாமல் இதுவரை வெளிவராத, இலை மறைமுறையாக இருக்கக்கூடிய, மக்களிடம் மறைக்கப்பட்டு இருக்கக்கூடிய சில விஷயங்களை ஆதாரப்பூர்வமாக அங்கே பேச இருக்கிறார் என்றும் பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் பட்டியலின மக்களின் பிரச்சனைகளை கவனிக்காமல் அவர்களை பயமுறுத்தி அவர்களுடைய வாக்குகளை மட்டும் அறுவடை செய்யும் சில தலைவர்கள் குறித்தும் தவெக தலைவர் விஜய் பேச இருக்கிறார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தின் கண்களும் நடிகர் விஜயின் வேங்கை வயல் விஜயத்தை நோக்கி இருக்கிறது. அதுவும், தமிழக வெற்றி கழகத்தின் முதலாம் ஆண்டு தொடக்க நாளான பிப்ரவரி 2-ம் தேதி இதனை செய்ய இருக்கிறார். திட்டமிட்டபடி பிப்ரவரி 2-ம் தேதி இந்த சந்திப்பு நடக்குமா..? அல்லது பரந்தூர் சந்திப்புக்கு அலைகழித்தது போல இதற்கும் அலைக்கழிக்கப்படுமா தமிழக வெற்றிக்கழகம்.. இங்கும் இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படுமா..? என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
Loading ...
- See Poll Result