Connect with us

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு – தமிழக அரசு

BJP, BJP Annamalai, dmk

Politics | அரசியல்

பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு – தமிழக அரசு

சில நாட்களுக்கு முன் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறி சில வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி பதற்றத்தை ஏற்படுத்தியதாக சிலர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக அரசு வழக்கு ஒன்றை பதிந்துள்ளது.

ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக  தமிழ்நாட்டில் வேலை செய்யும் வட மாநிலத்தவர்கள் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய ஆயிரக்கணக்கில் ரயில்வே நிலையங்களில் குவிந்து வருகின்றனர், இந்த நிலையில் பிகாரில் உள்ள பிஜேபி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிகாரை சேர்ந்த 12 பேர் தமிழர்களால் தாக்கப்படுவதாக கூறி புகைப்படம் ஒன்று ஒன்றை வெளியிட்டது.

மேலும் சமூக வலைதளங்களில் போலியான வீடியோக்களை பாஜகவினர் பரப்பி வந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு உடனடியாக கவனத்திற்கு எடுத்துக் கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு அவர்கள் ஆங்கிலத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அந்த வீடியோவை தமிழ்நாடு காவல்துறையின் twitter பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது சிலர் அரசியல் நோக்கத்திற்காக பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதை நம்ப வேண்டாம். வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக வாழ்கின்றனர் எனவும் இதுபோல் வதந்தியை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பொருட்டு வதந்தி பரப்புவோர் மீது ஏழு ஆண்டுகள் சிறை வரை கடுமையான சட்டங்கள் பாயும் என எச்சரித்து இருந்தார்.

இது குறித்து பேசிய தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் வடமாநில தொழிலாளர்களின் முக்கியத்துவம் பற்றியும் அவர்களின் பாதுகாப்பு பற்றியும் பேசி இருந்தார். இந்த நிலையில்,

 தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மீது 153 153a1 505, ஐ பி சி 505(1 )சிஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பிஜேபியும் பீகார் பிஜேபியும் இணைந்து வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலியான காணொளிகளை பரப்பி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 இது போன்ற முக்கியமான அரசியல் தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top