Connect with us

முதலமைச்சரின் மனைவிக்கு தட்டு தூக்கிய அறநிலையத்துறை அமைச்சர் – PHOTOS

முதலமைச்சரின் மனைவி

Politics | அரசியல்

முதலமைச்சரின் மனைவிக்கு தட்டு தூக்கிய அறநிலையத்துறை அமைச்சர் – PHOTOS

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை மனிதநேய திருநாள் என கொண்டாடி    முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இளம் ஜோடிகள் பலருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது

முதலமைச்சரின் மனைவி

இந்த நிகழ்வில் சென்னை கிழக்கு மாவட்ட திமுகவினர்  ஒருங்கிணைப்பில்நடத்தப்பட்ட  இந்த திருமண நிகழ்வு முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களின் தலைமையில்  ஒவ்வொரு இணையர்களுக்கும் துர்கா ஸ்டாலின் அவர்கள் தாலி எடுத்துக் கொடுக்க நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் துர்கா ஸ்டாலின் அவர்களின் பின்னால் நின்று கொண்டு ரோஜா இதழ்கள் கொண்ட தட்டை தூக்கி சுமந்து கொண்டு ஒவ்வொரு ஜோடிகள் பின்னால் வந்து கொண்டே இருந்தார்.

இதையும் படிங்க :  வெற்றியைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை - இ வி கே எஸ் இளங்கோவன்

இதை பார்த்த பலரும் அதை கேலி செய்தனர்.

எப்போதும் திமுகவினர்  அதிமுகவினரை சுயமரியாத இல்லாதவர்கள் முதலமைச்சரின் காலில் விழுந்து கும்பிடுபவர்கள், முதலமைச்சர் செல்லும் காரின் டயரை கும்பிடுபவர்கள் என கேள்வி பேசி சிரித்து வருவார்கள்.

முதலமைச்சரின் மனைவி

ஆனால் தற்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் முதலமைச்சரின் மனைவிக்கு தட்டு தூக்கி சுமப்பதை பெருமையாக எண்ணிக்கொண்டு பின்னால் செல்வதை பார்த்து அதிமுகவினர் பலரும் அந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பரப்பி கேலி செய்து வருகின்றனர்.

இதற்கு திமுகவினரின் பதில் என்ன என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இணையத்தில் வேகமாக பரவி வரும் அந்த புகைப்படம் கீழே

இதையும் படிங்க :  மோசடி கும்பலிடம் ஒரு லட்சத்தை இழந்த நக்மா ! போலீசில் புகார்

முதலமைச்சரின் மனைவி

இதுபோல சுவாரஸ்யமான பல அரசியல் தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top