Connect with us

திமுகவின் கிளை அமைப்பாக மாறிய கமல் ! கமெண்ட் பண்ணும் நெட்டிசன்கள்

dmk, kamal, MK Stalin

Politics | அரசியல்

திமுகவின் கிளை அமைப்பாக மாறிய கமல் ! கமெண்ட் பண்ணும் நெட்டிசன்கள்

கமல்ஹாசன் பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி, மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பிரபலங்கள் பலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

dmk, kamal, MK Stalin

 

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தனர். கமல்ஹாசன் தனது அரசியல் வாழ்க்கையை ரகசியமாகத் திட்டமிடத் தொடங்கினார், அதே நேரத்தில் ரஜினிகாந்த் தனது திட்டங்களைப் பற்றி தனது ரசிகர்களிடம் பேசினார்.

கட்சித் தலைவராக கமல் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே அவரது கொள்கைகள் என்ன என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். கட்சி தொடங்கும் போது கட்சியின் கொள்கைகள் குறித்து பேசிய அவர், அது இடது, வலது என்று இல்லை, மத்தியில் தான் இருக்கும் என்றார். இதன் அர்த்தம் பலருக்குப் புரியவில்லை.

இதையும் படிங்க :  கழுத்தில் உத்திராட்சத்துடன் சீமான் - என்ன இப்படி மாறிட்டார்

dmk, kamal, MK Stalin

மதுரையில் கட்சி தொடங்குவதில் ஊழலை ஒழிப்பதே முதன்மையானது என்று கமல் கூறினார். ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஆரம்பத்தில் திமுக அதிமுக என எல்லா கட்சிகளுக்கும் தானே மாற்றி எனக் கூறிய கமலஹாசன் தற்போது காங்கிரஸ் உடன் இடைத்தேர்தலில் கூட்டணி வைத்திருப்பது கமலஹாசனுக்கு போன தேர்தலில் வாக்கு செலுத்தியவர்களை நகைப்பிற்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள் விழா தமிழகம் எங்கும் திமுகவினரால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

 அதில் ஒரு பகுதியாக அமைச்சர் திரு சேகர் பாபு அவர்கள் தலைமையில் நடந்த மு க ஸ்டாலின்  அவர்களைப் பற்றிய வரலாற்று புகைப்பட கண்காட்சி ஒன்றை  மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் திறந்து வைத்தார்.

இதையும் படிங்க :  பாஜக உள்ளே வந்துவிடும் என கூறிய திமுக செய்த செயல்

dmk, kamal, MK Stalin

 அது மட்டும் இல்லாமல் தனது twitter பக்கத்தில் சாதனை ஆட்சி செய்து வரும் முதல்வர் அவர்களை பற்றி  தற்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது முக்கியமான கடமை ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 இதை பார்த்த நெட்டிசங்கள்  மக்கள் நீதி மையம் திமுகவின் கிளை அமைப்பாக மாறிவிட்டது என தங்களது ஆதங்கத்தை twitter கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர்.

 இதுபோல சுவாரசியமான பல தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தில் தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top