Connect with us

வைரலாகும் கமலஹாசனின் பழைய பேச்சு

Kamal Haasan, கட்சி, கமலஹாசனின்

Politics | அரசியல்

வைரலாகும் கமலஹாசனின் பழைய பேச்சு

கமலஹாசனின்பிப்ரவரி 21, 2018 அன்று மதுரையில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்தி, மக்கள் நீதி மய்யம் என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற பிரபலங்கள் பலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

Kamal Haasan, கட்சி, கமலஹாசனின்

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே நேரத்தில் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தனர். கமல்ஹாசன் தனது அரசியல் வாழ்க்கையை ரகசியமாகத் திட்டமிடத் தொடங்கினார், அதே நேரத்தில் ரஜினிகாந்த் தனது திட்டங்களைப் பற்றி தனது ரசிகர்களிடம் பேசினார்.

கட்சித் தலைவராக கமல் தேர்வு செய்யப்பட்டதில் இருந்தே அவரது கொள்கைகள் என்ன என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர். கட்சி தொடங்கும் போது கட்சியின் கொள்கைகள் குறித்து பேசிய அவர், அது இடது, வலது என்று இல்லை, மத்தியில் தான் இருக்கும் என்றார். இதன் அர்த்தம் பலருக்குப் புரியவில்லை.

இதையும் படிங்க :  தமிழர்களை சுரண்டி கொளுத்துவிட்டார் ! சீமானை விமர்சிக்கும் முன்னாள் தம்பி

மதுரையில் கட்சி தொடங்குவதில் ஊழலை ஒழிப்பதே முதன்மையானது என்று கமல் கூறினார். ஜாதி வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Kamal Haasan, கட்சி, கமலஹாசனின்

ஆரம்பத்தில் திமுக அதிமுக என எல்லா கட்சிகளுக்கும் தானே மாற்றி எனக் கூறிய கமலஹாசன் தற்போது காங்கிரஸ் உடன் இடைத்தேர்தலில் கூட்டணி வைத்திருப்பது கமலஹாசனுக்கு போன தேர்தலில் வாக்கு செலுத்தியவர்களை நகைப்பிற்கு உள்ளாகியுள்ளது.

இந்த நிலையில் 2021  பிப்ரவரி 9ஆம் தேதி  கமல் அவர்கள் கூறியது ‘  கருணாநிதியே அவமானப்படுத்த மு க ஸ்டாலின் என்று கூறினாலே போதுமானது’  எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க :  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு OPS-இன் பிளான் இதுதான்..! - மக்கள் மத்தியில் எடுபடுமா..?

 ஆனால்  தற்போது  2023  பிப்ரவரி 28ஆம் தேதி ‘  மாபெரும் தலைவரின் தந்தையின் மகனாக தொண்டனாக இருக்கும் சந்தோஷத்தையும் சவாலையும் அனுபவித்த ஏற்றவர், அவரின் படிப்படியாக உயர்வை படம்பிடிக்க வேண்டியது சரித்திர அவசியம் ‘  என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பற்றி கமல்ஹாசன் கூறியிருந்தார்.

Kamal Haasan, கட்சி, கமலஹாசனின்

இந்த இரண்டையும்  எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் வேகமாக  பரப்பி வருகின்றனர்.

 இதுபோன்ற சுவாரசியமான அரசியல் தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading

சமீபத்திய செய்திகள்

இன்றைய ராசிபலன்

Popular Articles

To Top