Politics | அரசியல்
மோடியை சந்திக்கும் உதயநிதி எதற்காக தெரியுமா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதை தொடர்ந்து அவரது தொகுதியில் பல முக்கியமான திட்டங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
அதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அவர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சராக வேண்டும் என அவரது கட்சித் தொண்டர்கள் பல்வேறு கூட்டங்களில் தீர்மானங்களை நிறைவேற்றி வந்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி கொடுத்து அழகு பார்த்தார் தந்தையும் தமிழ்நாட்டின் முதலமைச்சரான திரு மு க ஸ்டாலின் அவர்கள்.
ஒரே ஒரு செங்கலை கொண்டு தமிழ்நாடு முழுக்க மோடிக்கு எதிராக அதிமுக கூட்டணிக்கு எதிராக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை காணவில்லை என நூதனமான பிரச்சார யுத்தி மூலம் பிரபலம் அடைந்தார் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.
தற்போது டெல்லியில் முகாமிட்டிருக்கும் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்தியாவின் பிரதமர் திரு மோடி அவர்களை சந்திக்கப் போவதாக செய்திகள் கசிந்துள்ளது.
தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இளைஞர் நல மேம்பாட்டு திட்டங்கள் குறித்த கோரிக்கை மனு ஒன்றை மோடி அவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கொடுக்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் செய்தி சொல்கின்றன.
இருப்பினும் அரசியல் விமர்சனங்கள் இதை ஒரு ஆரோக்கியமான போக்காக கருதுகின்றனர்.
We Tamizhakam Hiring Content Writers Apply Now
உங்க வீட்டுல இப்படி துணி கிடக்குதா.? - ஆபத்து உங்களுக்கு தான்..! - தவறாமல் பாருங்கள்..!