Politics | அரசியல்
நாம் தமிழர் 10,000 ஓட்டா? ஷாக்கான இளங்கோவன் – வீடியோ
நடந்து முடிந்த ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியது அனைவரையும் அதற்கு உள்ளாகி உள்ளது. வெற்றி பெற்ற இளங்கோவன் அவர்கள் நாம் தமிழர் பத்தாயிரம் ஓட்டா என ஷாக்கான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஈரோடு இடைத்தேர்தலில் எந்தவித பணமும் பரிசு பொருட்களும் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மேனகா அவர்கள் பத்தாயிரம் ஓட்டுகளை வாங்கியுள்ளது அனைத்து கட்சியினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஏனெனில் திமுக ஒரு ஓட்டுக்கு 3000 அதிமுக ஒரு ஓட்டுக்கு 2000 கொடுத்துள்ளது என சமூக வலைதளங்களில் பரவலாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தனர்.
மேலும் ஸ்மார்ட் போன், கொலுசு, சாமி படங்கள் என பல பரிசுப் பொருட்கள் ஈரோடு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் புகைப்படங்களுடன் வெளியானது.
இதை எதிர்த்து டெல்லியில் தேர்தல் ஆணைய தலைமையகத்தில் நாம் தமிழர் கட்சி புகார் ஒன்றை அளித்திருந்தது.
நேற்று வெற்றி அறிவிப்பு வந்த பிறகு இ வி கே எஸ் இளங்கோவன் அவர்கள் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார்.
அதில் செய்தியாளர்கள் ‘ தேர்தலில் 400 கோடி செலவு செய்ததாக நாம் தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளதே என்ற கேள்வியை முன் வைத்தனர்.
அதற்கு பதில் அளித்த திரு இ வி கே இளங்கோவன் அவர்கள், எனக்குத் தெரிந்தது தினத்தந்தி நிறுவனர் ஆதித்தனார் தொடங்கிய நாம் தமிழர் கட்சி மட்டுமே இப்போது நீங்கள் எந்த நாம் தமிழர் கட்சியை சொல்கிறீர்கள் என வினாவினார்.
அதற்கு செய்தியாளர்கள் உங்களுடன் போட்டி போட்டு பத்தாயிரம் வாக்குகளை நாம் தமிழர் பெற்றிருக்கிறது எனக் கூறினர்.
அது போன தேர்தலில் தானே என இ பி கே எஸ் இளங்கோவன் அவர்கள் கூறினார்.
அதற்கு செய்தியாளர்கள் இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்து 668 வாக்குகளை பெற்றிருக்கிறது என கூறினர்.
அதற்கு இளங்கோவன் அவர்கள் அப்படியா என திரும்பத் திரும்ப கூறினார்.
அந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
11000 ஓட்டு வாங்குனதுக்கே ஷாக் ஆகுறான் இன்னும் 30000 ஓட்டுலாம் வாங்கியிருந்தா செத்தே போய்ருப்பான் போல… pic.twitter.com/8P7ccRAT1p
— Prabhakaran Kamaraj (@wolfprabha) March 2, 2023
இதுபோல சுவாரசியமான பல அரசியல் தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை